வெளி வேஷம்

வேதபகுதி: யோவான் 15 : 1 - 17

"இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம் தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன்.உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்." ஏசாயா 1 : 13,14



இன்றையக் காலத்தில் அநேகக் கிறிஸ்தவர்கள் பொய்க் கிறிஸ்தவர்களாக அல்லது வெளிவேஷக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏதோ நாம் காணிக்கைகளை அதிகமாகக் கொடுட்த்தாலோ அல்லது மற்றவர்கள் முன்பதாக நல்லவர்கள் போல நடித்தாலோ நம்மை நல்லவர்கள் என்று மக்கள் எண்ணுவார்கள் என்று மக்களுக்காக நல்லவர்கள் போல நடிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடப்பது இவைகளுக்கு நேர் எதிரானதாக இருக்கும். அநேகர் தங்களுடையப் பெயர் சபைகளிலே சொல்லப்படவேண்டும் அல்லது தங்களுடையப் பெயர் கல்வெட்டிலேப் பதிக்கப்பட வேண்டும் அல்லது தாங்கள் தான் இந்தச் சபையிலேப் பணக்காரர் என்று காண்பிக்கவேண்டுவதற்காகக் காணிக்கை கொடுக்கின்றார்கள். ஆனால் தங்கள் உள்ளத்திலோ கடவுள் பயம் சிறிது கூட கிடையாது. இதனைத் தான் சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் சவுலை எச்சரிக்கிறார்,


"கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்." 1 சாமுவேல் 15:22


ஆம் கர்த்தர் நம்முடையக் காணிக்கைகளை விட நாம் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுப்பதைத் தான் மிகவும் அதிகமாக விரும்புகிறார். நாம் அவருடைய சத்தத்திற்குக் கிழ்ப்படிவோமானால் அவர் நம்மை மேய்ச்சலுல்ல இடங்களிலே நம்மை வழிநடத்துவார். மாறாக நாம் அவருடைய சத்தத்திற்கு விலகி நடந்து வெளிவேஷக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து வருவோமானால் சவுலுக்கு ஏற்பட்ட கதி தான் நமக்கும் நடக்கும்.





சிந்தனை: நான் கர்த்தரின் சத்ததிற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறேனா?


ஜெபம்:
கர்த்தாவே நான் உம்முடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நடந்து அதன் மூலமாகப் பரலோகப் பாக்கியத்தைப் பெற அருள் புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்