தானியேலின் வெற்றி(ஜெயம்)

"தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது." தானியேல் 6:28 பி


தானியேல் இஸ்ரவேல் தேசத்தில் இருந்து பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டுச் செல்லப்பட்டார். ஆனாலும் அவர் பாபிலோனில் வாழ்ந்த காலங்களிலெல்லாம் மேன்மேலும் உயர்த்தப்பட்டார். தானியேல் சந்தித்த இராஜாக்கள் நான்கு பேர். இந்த நான்கு இராஜாக்களின் காலத்திலும் தானியேலின் காரியங்கள் அனைத்தும் வெற்றியாய் இருந்தது. தானியேலின் காரியம் ஜெயமாய் இருப்பதற்குத் தானியேலிடம் காணப்பட்ட ஒரு சில நற்காரியங்கள்



1. ராஜ போஜனத்தை விலக்கினான்:

தானியேல் ராஜாவினால் கட்டளையிடப்பட்ட ராஜபோஜனத்தையும் அவரால் கொடுக்கப்படுகின்ற திராட்சைரசத்தையும் விலக்கி விட்டு( தானியேல் 1: 8) மரக்கறிகளைக் கேட்டு வாங்கி உண்கின்றார். ராஜபோஜனத்தில் ஒரு வித போதை வஸ்து கலக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது. ஆகவே தானியேல் தன்னை மதுபானம் மற்றும் ராஜபோஜனத்தினின்றும் காத்துக் கொள்ளுகின்றார். நாம் இன்னும் மதுப்பழக்கத்தினால் தள்ளாடிக் கொண்டிருக்கின்றோமா? அல்லது எப்படி இருக்கின்றோம்?

2. கூடி ஜெபித்தல்:

தானியேல் பாபிலோனில் உள்ள ஞானிகள் அனைவரையும் கொல்வதற்கு ராஜா உத்தரவிட்டிருக்கிறார் என்பதை அறிகின்றான். ராஜாவிடம் போய் மற்றவர்கள் கொல்லப்படாமல் இருப்பதற்குத் தவனை கேட்கின்றார். தன்னுடைய நண்பர்கள் சாத்ராக் மெஷாக் ஆபேத்நேகோ ஆகியவர்களோடு சேர்ந்து தேவனிடத்தில் விண்ணப்பம் செய்கின்றார்( தானியேல் 2: 18). கர்த்தரும் இவர்களின் ஜெபத்தைக் கேட்டு தானியேலுக்குச் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் வெளிப்படுத்துகின்றார். நமக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கூடி ஜெபிக்கின்ற பழக்கம் உண்டா?



3. உண்மை :
தானியேல் தன்னுடைய எல்லாக் காரியத்திலும் மிகவும் உண்மையுள்ளவராகக் காணப்படுகின்றார். அப்படி உண்மையுள்ளவராய் இருந்தப்படியினால் பாபிலோனிய அதிகாரிகளால் தானியேலிடத்தில் எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை.( தானியேல் 6:4). நாம் நம்முடையப் பணிகளில் எப்படி இருக்கின்றோம்?

4. தனி ஜெபம்:

தானியேல் தினமும் மூன்று வேலைத் தவறாது இஸ்ரவேலின் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்து வந்தார்( தானியேல் 6 : 10). நாம் நமது அனுதின வேலையில் தனிஜெபத்திற்கு நேரம் ஒதுக்கி உள்ளோமா?

5. நண்பர்களின் தேர்வு:


தானியேல் எருசலேமிலிருந்து அநேகர் அடிமைகளாக வந்திருந்தாலும் தனது நண்பர்களாக கர்த்தருக்குப் பயந்து நடக்கும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைத் தேர்ந்தெடுத்தார். நம்முடைய நண்பர்களின் தேர்வு எப்படி இருக்கின்றது?

நாமும் தானியேலிடம் காணப்பட்ட நற்குணங்களுடன் வாழுவோமென்றால் நம்முடையக் காரியங்களும் ஜெயமாகும் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை



சிந்தனை: தானியேலிடம் உள்ள நற்குணங்கள் என்னிடத்தில் காணப்படுகின்றதா?


ஜெபம்:
அன்பின் தேவனே தானியேலிடம் காணப்பட்ட அனைத்து நற்குணங்களும் என்னில் காணப்பட உம் கிருபையையும் வழிநடத்துதலையும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்