பாவத்திற்கு அடிமை

" பாவஞ்செய்கிறன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்" யோவான் 8:34



புகைப்பிடிக்கும் நபரிடத்திலோ அல்லது குடிப்பழக்கம் உடைய நபரிடத்திலோ நீங்கள் இந்தப் பழக்கத்தை விட்டு விடுவதினால் உங்கள் உடலுக்கு நன்மை என்று நாம் சொன்னால் அவர்கள் நான் இந்தப்பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் என்னால் முடியவில்லை என்று நம்மிடம் சொல்லுவார்கள். ஒரு சிலர் சினிமாவிற்கு அடிமைகளாக இருப்பார்கள் ஒரு சிலர் தொலைக்காட்சியில் வரும் தொடர் நாடகங்களுக்கு அடிமைகளாக இருப்பார்கள் ஒரு சிலர் தொலைக்காட்சியில் வரும் சில நிகழ்ச்சிகளுக்கு (ஆட்டம் பாட்டம்) அடிமைகளாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள். பாவத்திற்கு அடிமைகளாக இருக்கிறோம் என்று தெரிந்தாலும் அவர்களால் அந்தப் பாவத்தை விட்டு விட முடிவதில்லை. ஏனென்றால் அந்தப் பாவமானது அவர்களை ஆட்கொண்டு அடிமைப்படுத்தி வைத்துள்ளது. இதனால் குடும்பங்களிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பலப் பிரச்சனைகள். இந்தப் பாவக்கட்டுகளில் இருந்து விடுபட ஒரே வழி இயேசு கிறிஸ்துவினால் பாவங்கள் கழுவப்பட்டால் மட்டுமே முடியும்.



எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் அதிகமாகப் புகைப் பிடிக்கும் பழக்கத்தை உடையவர். புகைப்பதினால் ஏற்படும் தீமைகளை நினைத்துப் படிப்படியாகப் புகைப்பதை நிறுத்தினார். நாட்கள் சென்றது. ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டுமாகப் புகை பிடிக்கும் பழகத்திற்கு அடிமையாகி விட்டார். முழுவதுமாக அந்தப் பாவப்பழக்கத்திலிருந்து அவர் விடுபடாததே அவரை மீண்டும் புகை பிடிப்பதற்குத் தூண்டியது. இயேசுக் கிறிஸ்துவின் விலையேறப்பெற்றக் கல்வாரி இரத்தத்தினால் கழுவப்பட்டு விட்டால் இப்படிப் பட்ட விட முடியாதப் பாவப் பழக்கங்கள் நம்மிடம் இருந்திருந்தால் அவைகள் எல்லாம் அடியோடு மறந்துப் போய்விடும். ஏனென்றால் அவர் நம்முடையப் பாவங்கள் அக்கிரமங்கள் எல்லாவற்றையும் மன்னித்துக் கடலின் ஆழத்திலே போட்டுவிட்டார். நம்மிடையே உள்ள துக்கங்கள் பாரங்கள் எல்லாம் மறைந்துப் போய்விடும்.




சிந்தனை: "நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்." ரோமர் 6:22


ஜெபம்:
இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்த அன்பின் ஆண்டவரே விட முடியாமல் இருக்கின்றப் பாவப்பழக்கத்தில் இருந்து விடுதலை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்