முழு இருதயம்

"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;" ஏசாயா 29:13





மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தின் நிலைமையில் தான் அநேகக் கிறிஸ்தவர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏதோ ஞாயிற்றுக்கிழமை என்றால் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும், பண்டிகைகள் வந்தால் அதற்காகப் புதிய உடைகள் வாங்கவும் சிறப்பாகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கின்ற மனப் போக்கில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையான மனதுடனும் தூய இருதயத்துடனும் தேவனை ஆராதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கடமைக்காக ஆராதனையில் கலந்து கொள்கின்றார்கள். ஆராதனைகளில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் மற்றவர்களோடு பேசிக் கொண்டும் தாங்கள் இறைவனின் திருச்சன்னிதியில் இருக்கின்றோம் என்பதை மறந்து விடுகின்றனர். அவர்களைப் பார்த்துதான் இறைவன் மனந்திரும்புங்கள் என்று ஏசாயா தீர்க்கன் மூலமாக எச்சரிக்கின்றார்.




நாம் இன்னும் நம்முடைய இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு இருப்போமானால் நம்மைத் தேவன் நியாயத்தீர்ப்பு நாளிலே அக்கினிக்கு ஒப்புக் கொடுப்பார். அப்பொழுது நம்மைத் தப்புவிப்பார் ஒருவருமில்லை. நாம் நம்மை அர்ப்பணித்து நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனை ஆராதித்து அவருடையக் கற்பனைகளைப் பின்பற்றி நடப்போமானால் நம்மையும் தேவன் ஆசீர்வதித்து வழிநடத்துவார். மாறாக நாம் இன்னமும் கடமைக் கிறிஸ்தவர்களாக வாழுவோமானால் நாம் தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ள முடியாது.



"என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்" 1 சாமுவேல் 2 :30



சிந்தனை: நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் தேவனை ஆராதிக்கின்றோமா?


ஜெபம்:
கர்த்தாவே நான் என்னுடைய முழு இருதயத்தோடும் உமக்குக் கீழ்ப்படிந்து உம்மை உண்மையாய் ஆராதிக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்