அயலார் மீது கரிசனை

வேதபகுதி: லூக்கா 6 : 27 - 36

"மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." லூக்கா 6 : 31


ஒரு நண்பரிடம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு முன்பதாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் நீங்கள் இந்தத் திருமணத்திற்கு என்னச் செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட பொழுது எனது திருமணத்திற்கு அவர்கள் என்னச் செய்தார்களோ அதையே தான் இந்தத் திருமணத்திற்குச் செய்யப் போவதாகக் கூறினார். இப்படித் தான் நம்மில் அநேகர் மற்றவர்கள் நமக்கு என்னச் செய்தார்களோ அதையேத் தான் திரும்பவும் செய்கின்றோம்.ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று கூறுகிறார்.


நாமோ நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் அயலகத்தாரிடம் அன்பு கொள்ளாமல் அவர்களிடம் வெறுப்பு காட்டுகின்றோம். இப்படிப்பட்ட காரியங்கள் மேலும் பகைமையையும் வெறுப்பையும் தான் வளர்க்கும். மாறாக இயேசு கிறிஸ்துக் கூறிய படி நாம் நம்முடைய சத்துருக்களைச் சிநேகிக்கும் போது அவர்கள் நம்முடைய நற்குணங்களைப் பார்த்துத் திருந்தி கிறிஸ்துவினண்டை வழிநடத்துவோமானால் நம்மை ஆண்டவர் அவருடையச் சொந்தப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசிர்வதிப்பார்.



சிந்தனை: நான் என்னுடைய அயலகத்தாரிடம் அன்பு கூறுகிறேனா?

ஜெபம்:
தேவனே நான் என்னுடைய அண்டை அயலகத்தாரிடம் அன்பு கூர்ந்து அதன் மூலம் அவர்களை உம்மண்டை வழிநடத்துகிறக் கருவியாக என்னைப் பயன்படுத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இடறல்

வேதபகுதி: மத்தேயு 18 :6 - 10


"என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்."மத்தேயு 18 :6



இடறல் என்பது கிறிஸ்துவின் நாமம் எந்த இடங்களில் எல்லாம் பரிசுத்தக்குலைச்சலாக்கப் படுகிறதோ அல்லது அவருடைய நாமம் எங்கெல்லாம் தூஷிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் மற்ற மக்களைக் கிறிஸ்துவினண்டை வருவதற்கு இடறல் உண்டாக்குகிறோம்.



நாம் எப்பொழுதெல்லாம் இடறல்களை உண்டாக்குகின்றோம் என்று பார்ப்போமானால்

1. இவனெ(ளெ)ல்லாம் ஒரு கிறிஸ்தவனா/கிறிஸ்தவளா என்று மற்ற மக்களால் சொல்லப்படுகின்றபோது(புகை, மது)
2. புதிதாகக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் நாம் செய்கின்றப் பாவமானக் காரியங்களுக்குள்ளே வழிநடத்தும் போது(திருச்சபை அரசியல்)
3. உலகத்தையும் அதின் காரியங்களையும் நாம் நேசித்து இறைவனை விட்டு விடும் போது (பெயர்க் கிறிஸ்தவர்கள் ஆகும் போது)



இப்படி இடறல் உண்டாக்குகின்றக் காரியங்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம். நாம் மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்குகிறவர்களாக இருப்போமானால் எந்திரக் கல்லைக் கழுத்தில் கட்டிக் கடலின் ஆழத்திலே போய் அமிழ்த்த வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதன் பொருள் என்னவென்றால் நமக்கு ஆசிர்வாதம் கிடையாது மாறாகச் சாபம் தான் வந்து சேரும்.





சிந்தனை: நம்முடையக் கிரியைகள் மற்றவர்கள் கிறிஸ்துவினண்டை வருவதற்கு உதவியாக இருக்கிறதா? அல்லது இடறல் உண்டாக்குகிறவர்களாக இருக்கிறோமா?


ஜெபம்:
தேவனே நான் மற்றவர்களை உம்மண்டை வழிநடத்தும் கருவியாக என்னைப் பயன்படுத்தும். அதற்கு என்னுடையக் கிரியைகள் சாட்சியாக இருக்க உதவி புரியம். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நியாயத்தீர்ப்பு

வேதபகுதி: எண்ணாகமம் 20 : 7 - 12


"கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். "எண்ணாகமம் 20 : 12



இந்தப் பகுதியில் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு அழைத்துக் கொண்டுச் செல்லுகின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் தண்டனை கிடைக்கின்றது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறக் காரியம் என்னவென்றால் நமது ஆண்டவர் மன்னிப்பின் தேவன் நாம் எப்படிப்பட்டத் தவறுகள் செய்தாலும் நம்மை மன்னித்து நமது தவறுகளையெல்லாம் கடலின் ஆழத்திலே போட்டுவிடுவார். ஆனால் நாம் செய்கின்றது தவறு என்று நமக்குத் தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் செய்கின்ற காரியங்களுக்கு மன்னிப்பு உண்டு ஆனாலும் ஆண்டவர் நாம் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாதபடிக்கு நாம் செய்த பாவத்திற்கு நமக்குத் தண்டனை கொடுக்கிறார்.



மோசே என்ற தேவ மனிதன் "என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12 :7" என்று கர்த்தரால் சாட்சி கொடுக்கப்பட்டவர். ஆனால் அவர் செய்தது ஒரே ஒரு சிறிய பாவம் தான். கர்த்தர் மோசேயைப் பார்த்துக் கன்மலையினிடத்தில் போய் பேசு என்றார், ஆனால் இவரோ கன்மலையை அடித்தார். ஆகவே கர்த்தர் என்னிடத்தில் நம்பிக்கை வையாமல் போனதினால் உங்களை நான் கானான் தேசத்திற்குப் பிரவேசிக்கப் பண்ணுவதில்லை என்று அவர்களுக்குத் தண்டனை கொடுக்கிறார். நாமும் இப்படிப் பட்டச் சிறிய காரியங்களை இன்னும் செய்துக் கொண்டிருப்போமானால் நமக்குக் கண்டிப்பாகத் தண்டனை உண்டு. நாம் தண்டனைக்குத் தப்புவிக்கப்படவேண்டுமென்றால் இன்றே நாம் மனந்திரும்புவோம்.





சிந்தனை: "பாவத்தில் சிறியப் பாவம் என்றோப் பெரியப் பாவம் என்றோ இல்லை"


ஜெபம்:
தேவனே நான் எப்பொழுதும் உமக்குக் கீழ்ப்படிய உமது கற்பனைகளைப் பின்பற்ற உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்