அயலார் மீது கரிசனை

வேதபகுதி: லூக்கா 6 : 27 - 36

"மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்." லூக்கா 6 : 31


ஒரு நண்பரிடம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு முன்பதாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அவரிடம் நீங்கள் இந்தத் திருமணத்திற்கு என்னச் செய்யப் போகிறீர்கள் என்று கேட்ட பொழுது எனது திருமணத்திற்கு அவர்கள் என்னச் செய்தார்களோ அதையே தான் இந்தத் திருமணத்திற்குச் செய்யப் போவதாகக் கூறினார். இப்படித் தான் நம்மில் அநேகர் மற்றவர்கள் நமக்கு என்னச் செய்தார்களோ அதையேத் தான் திரும்பவும் செய்கின்றோம்.ஆனால் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் என்று கூறுகிறார்.


நாமோ நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் மற்றும் அயலகத்தாரிடம் அன்பு கொள்ளாமல் அவர்களிடம் வெறுப்பு காட்டுகின்றோம். இப்படிப்பட்ட காரியங்கள் மேலும் பகைமையையும் வெறுப்பையும் தான் வளர்க்கும். மாறாக இயேசு கிறிஸ்துக் கூறிய படி நாம் நம்முடைய சத்துருக்களைச் சிநேகிக்கும் போது அவர்கள் நம்முடைய நற்குணங்களைப் பார்த்துத் திருந்தி கிறிஸ்துவினண்டை வழிநடத்துவோமானால் நம்மை ஆண்டவர் அவருடையச் சொந்தப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசிர்வதிப்பார்.



சிந்தனை: நான் என்னுடைய அயலகத்தாரிடம் அன்பு கூறுகிறேனா?

ஜெபம்:
தேவனே நான் என்னுடைய அண்டை அயலகத்தாரிடம் அன்பு கூர்ந்து அதன் மூலம் அவர்களை உம்மண்டை வழிநடத்துகிறக் கருவியாக என்னைப் பயன்படுத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்