மதியம் திங்கள், 18 பிப்ரவரி, 2008

ஆசிர்வாதமும் சாபமும்

வேதபகுதி: உபாகமம் 11 : 26 - 32

"இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்."உபாகமம் 11:26


நாம் பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்துப் பார்ப்போமானால் கர்த்தர் நமக்கு முன்பாக இரண்டு காரியங்களை வைக்கிறார். முதலாவது ஆசீர்வாதம், இரண்டாவது சாபம். இந்த இரண்டில் நமக்கு எது தேவை என்பதை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.


கர்த்தர் நமக்குக் கூறிய கற்பனைகள் அனைத்தையும் கைக்கொண்டு அதன் படி நடப்போமானால் நமக்கு ஆசீர்வாததைத் தந்தருளுவார். நாம் கற்பனைகளைக் கைக்கொண்டு நடக்கும் போது ஒரு சில சோதனைகளையும் வேதனைகளையும் சந்திக்க நேரிடும் ஆனால் முடிவோ நமக்கு ஆசிர்வாதமாக இருக்கும். நாம் யோபுவின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவன் அநேகப் பாடுகளின் மத்தியிலும் கர்த்தரை உறுதியாகப் பற்றிக் கொண்டு இருந்ததினால் இரட்டிப்பான ஆசிர்வாதத்தைக் கண்டு கொண்டான். மாறாக நாம் கற்பனைகளைப் பின்பற்றாமல் இருப்போமானால் நமக்குச் சாபங்கள் தான் வரும். நாம் இஸ்ரவேலில் முதல் ராஜாவான சவுலின் வாழ்க்கையைப் பார்ப்போமானால் அவன் கர்த்தரைப் பின்பற்றின நாட்களில் எல்லாம் அவனுக்கு வெற்றி கிடைத்தது. அவன் கர்த்தரின் சத்தத்திற்க்குக் கீழ்ப்படியாமற்போன போது அவனுக்குத் தோல்வி தான் கிடைத்தது. ராஜ்ஜியபாரமும் அவன் குடும்பத்தை விட்டுப் போயிற்று.



சிந்தனை: நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோம்? ஆசீர்வாதத்திற்குரிய பாதையா அல்லது சாபத்திற்கு நேராக வழி நடத்துகிறப் பாதையா?

ஜெபம்:
தேவனே நான் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து அதன் மூலம் ஆசீர்வாதத்தைச் சுதந்தரிக்கக் கிருபை தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்