மதியம் வியாழன், 21 பிப்ரவரி, 2008

நன்மை செய்தல்

"நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்." 2 தெசலோனிக்கேயர் 3: 13



அந்த ஊர் இந்து மக்கள் நிறைந்த கிராமம். அங்கு யாருக்காவது வியாதி வந்தால் அங்குள்ளப் பூசாரியிடம் வந்து பூஜை செய்வார்கள். ஒரு நாள் அந்தப் பூஜாரியின் மகனுக்கு பாம்பு கடித்து வாயில் நுறை தள்ளிக்கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான், பூஜாரியோ செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு சில மணி நேரத்தில் மரித்துப் போய்விடுவான் என்று அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வழியே ஆங்கிலேய மிஷனெரி அருள்திரு.ஜாண் தாமஸ் போதகர் வந்துக் கொண்டிருக்கிறார். அந்தச் சிறுவனின் நிலைமையைப் பார்த்தவுடன் உடனடியாக அந்தப் பையனுக்கு மருத்துவ உதவி செய்து அவனைக் காப்பாற்றிகிறார். அந்தக் கிராம மக்கள் அவரைத் தெய்வமாகப் பார்க்கின்றனர். அவரோ கிறிஸ்துவின் அன்பை அவர்களுக்கு விளக்கிக் கூறினார். அந்தக் கிராமமே இயேசுவை ஏற்றுக் கொண்டது, மெய்ஞானமாகியக் கிறிஸ்துவை அறிந்துக் கொண்டதினால் அந்த ஊருக்கு மெய்ஞானபுரம் என்றுப் பேரிட்டார்கள்.



ஆம் பிரியமானவர்களே கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறவர்களாகிய நாமும் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதைப் பவுல் தேசலோனிக்கேயருக்கு எழுதுகின்ற கடிதத்தில் குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவர்களாகிய நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்கின்ற போது மட்டும் தான் நம்மில் மற்றவர்கள் கிறிஸ்துவின் அன்பைக் கண்டுக் கொள்ளுகிறார்கள். போதகர் ஜாண் தாமஸ் அவர்கள் அந்தச் சிறுவனுக்கு உதவியக் காரணத்தினால் தான் அந்தக் கிராம மக்கள் கிறிஸ்துவின் அன்பை ருசித்துக் கொள்ள முடிந்தது. நாமும் நம்மால் முடிந்த நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்து மற்றவர்களை ஆண்டவரிடம் வழி நடத்தும் கருவியாகப் பயன்படுவோம். கர்த்தர் நம்மை ஆசிர்வத்து வழிநடத்துவார்.




சிந்தனை: "தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்." சங்கீதம் 37:27


ஜெபம்:
அன்பு நிறைந்த தேவனே நான் என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நன்மை செய்து அதன் மூலமாக அவர்களை ஆதாயம் பண்ணக் கிருபை தாரும், ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்