வேதபகுதி: எபேசியர்: 4 :1 - 8
"நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து.." எபேசியர்: 4 :1
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஊழியக்காரனாகவும் ஊழியக்காரியாகவும் தான் அழைக்கப்பட்டிருக்கிறோம். போதகர்கள், நற்செய்தியாளர்கள், மிஷனெரிகள் மட்டும் தான் ஊழியஞ்செய்வதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக நாம் நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருமே ஒவ்வொரு வகையிலும் ஊழியஞ்செய்வதற்காகத் தான் இந்த உலகத்தில் ஆண்டவரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறோம். போதகர்கள் ஞானஸ்னானம் கொடுக்கும் போது கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்வாயா என்று நம்மிடம் கேட்கும் போது நான் கடவுளுடைய ஒத்தாசையால் செய்வேன் என்று வாக்குக் கொடுத்து விட்டு அந்த ஆராதனை முடிந்தவுடன் மறந்து விடுகின்றோம்.
கர்த்தர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாலந்தைக் கொடுத்திருப்பார். ஒரு சிலருக்கு நன்றாகப் பாடல் பாடும் தாலந்தைக் கொடுத்திருப்பார், ஒரு சிலருக்கு நன்றாக இசைக்கருவிகளை மீட்டக்கூடியத் தாலந்தைக் கொடுத்திருப்பார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமானத் தாலந்துகளைக் கொடுத்திருப்பார். நாம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறத் தாலந்துகளை உணர்ந்து அவைகளைக் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும்படி நாம் பயன்படுத்தும் போது கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகின்றது. நாமோ நமக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறத் தாலந்தை ஒரு வெள்ளிக்காசைப் பெற்ற மனிதனைப் போலப் பயன்படுத்தாமல் இருப்போமானால் கர்த்தர் நம்மையும் எரிகிற அக்கினிக்கடலிலே தள்ளுவார்.
சிந்தனை: நான் எனக்குக் கொடுக்கப்பட்டுருக்கிற அழைப்பை உணர்ந்து அதன்படி நடக்கிறேனா?
ஜெபம்: ஆண்டவரே நான் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றத் தாலந்துகளை உம்முடைய நாம மகிமைக்காகப் பயன்படுத்தி அதன்மூலமாக உம்மை அறியாத மக்களை உம்மண்டை வழிநடத்தக் கிருபை தாரும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக