மதியம் புதன், 27 பிப்ரவரி, 2008

துதித்தல்

"கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது." சங்கீதம் 98: 1



நம்முடைய தேவனாகியக் கர்த்தர் நம்மைப் படைத்திருப்பதன் நோக்கம் அவர் படைத்தப் படைப்புகளை நாம் அனுபவித்து நாம் பெற்ற நன்மைகளை நினைத்து நாம் கர்த்தரைத் துதிப்பது தான். ஆனால் நாமோ கர்த்தரிடமிருந்து நன்மைகள் பலவற்றை பெற்றாலும் நாம் அவரை நன்றி செலுத்தித் துதிப்பதை மறந்து விடுகிறோம். கர்த்தரைத் துதித்துப் பாடுவதிலே கிடைக்கின்ற இன்பம் பேரானந்தம்.



வேதநாயகம் சாஸ்திரியார் அவர்கள் தஞ்சை சரபோஜி மன்னரிடத்திலேப் பணியாற்றும் போது ஒரு முறை மன்னர் சாஸ்திரியாரிடம் தன்னுடையக் கடவுளைப் பற்றிப் பாடும்படி கூறினார். ஆனால் வேதநாயகம் சாஸ்திரியார் நான் கர்த்தரைப் பற்றி மட்டும் தான் பாடுவேன் என்று சொல்லி ஏசுவையேத் துதி செய் என்றப் பாடலை எழுதி அங்கு அவையோர் மத்தியில் பாடினார். அவையிலிருந்த அனைவரும் மன்னர் இவருக்கு என்ன தண்டனைக் கொடுக்கப் போகிறாறோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மன்னரோ நீர் உமது கடவுளைக் குறித்தேப் பாடும் என்று விட்டு விட்டர். ஆம் நாம் நம்முடையத் தேவனைக் குறித்துப் பாடும் போது கர்த்தர் நம்மை நினைத்து மற்ற மக்களிடம் கிரியை செய்கிறார்.



ஆனால் ஒரு சிலராகிய நாமோ சினிமாப் பாடல்களையும். ஒரு சிலர் மேற்கத்திய பாப் பாடல்கள் தான் பிடிக்கும் என்று அவைகளை தங்கள் வாயினால் பாடுகிறார்கள். அவர்கள் ஆலயத்திற்கு வந்து விட்டால் ஏதோ தெரியாத இடத்திற்கு வந்து விட்டது போல அங்கும் இங்கும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நாம் கர்த்தரைப் பாடப் பாட நம்முடைய உள்ளம் அன்பினால் பூரிக்கும், நம்முடைய பாவக் கட்டுகள் எல்லம் பறந்து போகும்.




சிந்தனை: நம்முடைய வாயினால் எந்தப் பாடல்களைப் பாடுகிறோம்?


ஜெபம்:
ஆண்டவரே நான் எப்பொழுதும் உம்மைத் துதிக்கக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்