சுக்கான்

வேதபகுதி:யாக்கோபு 3:4


கப்பல்கள் அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும் வசனம் 4



நாவு என்கிற சிறிய உறுப்பைப்பற்றிப் பெரிய காரியங்களைச் சிந்திக்கலாம். எழுதலாம். அது கடுங்காற்று கடலில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்துவதுபோல நமது வாழ்க்கையையே ஆட்டம் காணச்செய்துவிடுகிறது. நமது சாட்சி வாழ்க்கையை நாற்றத்திற்குள்ளாக்கிவிடுகிறது. எனவே நாம் எச்சரிக்கையோடிருந்து நாவின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.



நாவிலிருந்து மதியீனமான சொற்கள் புறப்பட்டு வருகின்றன. அது நம் செயல்பாடுகளைக் கெடுத்து, மனிதர் நடுவேயுள்ள நல்லுறவை அழித்துவிடுகிறது. அன்பற்ற வாழ்க்கைக்கு நம்மை வழிநடத்துகிறது. எனவே நாவு வெளிப்படுத்தும் வார்த்தைகளைக்குறித்து நாம் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்கவேண்டும்.




நாவின் செயல்பாட்டிற்கும், விருப்பத்திற்கேற்பவும் நமது வாழ்க்கையை அமைக்காமல், நாம் தேவனுடைய விருப்பத்திற்கேற்ப நமது நாவை செயல்படுத்த வேண்டும். பெரிய கப்பல்கள் சிறிய சுக்கானால் திருப்பப்படுவது போல, திருமறைப் போதனைகளால் நாமும் நாவைக் கட்டுப்படுத்தி இறைச்சித்தம் செய்யப்பட நாவை இயக்க வேண்டும்.




சிந்தனை: நான் எப்படி என் நாவை உபயோகப்படுத்துகிறேன்?


ஜெபம்: தேவனே உமது சித்தத்திற்கேற்ப என் நாவை அடக்கிச் செயல்பட பெலமும் மனமுன் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நீடிய பொறுமை

வேதபகுதி:யாக்கோபு 5 : 7 - 12


நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். வசனம் 8



தரங்கம்பாடி மற்றும் பெங்களூர் வேதாகமக் கல்லூரிகளில் பணியாற்றிய வேத நிபுணரான சாமுவேல் ஐயர் அவர்கள் தன் வாழ்க்கையில் நீண்டகாலம் பல சோதனைகளை அனுபவித்தார். மனைவி நீண்ட நாட்களாக வியாதிப்படுக்கையில் இருக்க மகன் மரித்தான். அடக்க ஆராதனை நிறைவு பெற்றவுடன் தன் பேராயரைச் சந்திக்க ராஜினாமாக் கடிதத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் பட்ட ஒரு துண்டுத் தாளில் அடங்கிய வாசகம், " என் மீட்பர் உயிரோடிருக்கிறார்" (யோபு 19:25) என்பதே. உடனே அவர் மனக்கன்முன் தோன்றிய வேதபகுதி யோபுவின் புஸ்தகம். யோபு சந்தித்தப் பாடுகள் அவர் கண்முன் திரைப்படம் போல ஓடியது. அத்தனை பாடுகளுக்கு மத்தியிலும் மனம் தளராது இவ்வசனத்தைக் கூறிய விசுவாச வீரரான யோபுவின் வாழ்க்கை சாமுவேல் ஐயருக்குப் புத்துண்ரச்சியைக் கொடுத்தது. அப்போது அவர் எழுதிய பாடல் தான் "என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக்கு என்ன குறையுண்டு நீ சொல் மனமே"



ஆம் அருமையானவர்களே, நாம் சந்திக்கும் பாடுகள் மத்தியிலும் நாம் ஆண்டவரைத் துதித்தால் தேவனே அதை நன்மையாக முடியச் செய்வார். பக்தன் யோபுவின் வாழ்க்கையைப் பார்க்கும் போது இத்தனை பாடுகள் மத்தியிலும் அவர் தூஷிக்கவேயில்லை, அவருடைய மனைவி யோபுவைப் பார்த்து தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்று சொல்லுகிறார். அதற்கு யோபு தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை(யோபு 2: 9,10).




ஆண்டவருக்கு நன்றி செலுத்தும்போது நாம் இழந்து போன ஆசிர்வாதமோ, சுகமோ, நன்மையோ எதுவாயிருந்தாலும் ஆண்டவரை நாம் துதிக்கும் போது அவர் யோபுவை ஆசிர்வதிதது போல இரட்டிப்பான நன்மைகளால் நம்மையும் ஆசிர்வதிப்பார்.




சிந்தனை: நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டத்தைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. எபிரேயர்: 10 : 36


ஜெபம்: ஆண்டவரே, வேதனைகள் துன்பங்களின் மத்தியில் நீடிய பொறுமையைத் தந்து ஆசிர்வதியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எது பாவம்?

வேதபகுதி:யாக்கோபு 4 : 16 - 17


ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதை செய்யாமற்போனால் அது அவனுக்குப் பாவமாயிருக்கும். வசனம் 17



சுந்தர் தன் நண்பர்களோடு தன் கிராமத்திற்குச் செல்லுவதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தான். ஒரு பெரியவர் (படிக்காதவர்) பாபநாசம் செல்ல எந்தப் பேருந்தில் ஏற வேண்டும் என்று கேட்டார். சுந்தர் அவரை சங்கரன்கோவில் பேருந்தில் ஏற்றிவிட்டான். தன் நண்பர்களோடு தான் செய்ததைக் குறித்துப் பெருமையாகப் பேசிக்கொண்டான். தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். அவனது தகப்பனார் இரவில் வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். எதற்காக இவ்வளவு நேரம் ஆனது என்று சுந்தரின் அம்மா கேட்டார்கள். தகப்பனார் தான் வந்த பேருந்து காட்டுப்பாதையில் பிரேக் டவுண் ஆகியதாகவும், அடையாளம் தெரியாத ஒரு வாலிபன் தன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டதாகவும் கூறினார். இதைக் கேட்ட சுந்தர் சுக்கு நூறாய் உடைந்தான். மனம் திருந்தினான்.



தீமையான காரியத்தைச் செய்வதிலும், பேசுவதிலும் வரும் புகழ்ச்சி, பாராட்டு யாவுமே பாவம்.




நன்மை செய்ய முடியும் என்றால் அந்த நன்மையை, உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். செய்யாமற்போனால் பாவம். 38 வருடமாய் வியாதி கொண்டிருந்த மனிதனுக்கு நன்மை செய்ய ஒருவரும் இல்லை. இதைப்போல் எத்தனை பேர் உன்னை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.




சிந்தனை: நாம் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோம்? தீமைக்குத் தீமை செய்கிறோமா? அல்லது நன்மை செய்கிறோமா?


ஜெபம்: தேவனே நான் தீமைக்குத் தீமை செய்யாமல் நன்மையை மட்டுமே செய்ய என்னைப் பெலப்படுத்தும் . ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நாளை நமதா?

வேதபகுதி:யாக்கோபு 4 : 13 - 15


நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. வசனம் 14



சந்திரன் பெரிய தொழில் அதிபர். பண ஆசை பிடித்தவர். பணம் சம்பாதிப்பதுதான் அவரது பிரதான நோக்கம். அவரது பழைய நண்பர் ஜெயராஜ். சந்திரனிடம் எதற்காக இவ்வாறு பணம் பணம் என்றே ஓடிக்கொண்டிருக்கிறாய்? இருப்பது போதும் என்று அதிலே திருப்தி அடையவேண்டியதுதானே என்று கேட்டார். அதற்கு சந்திரன் கோபமாக, "நீ ஒரு முட்டாள். இந்தக் காலத்தில் பணம் இல்லவிட்டால் உலகில் மதிப்பே கிடையாது" என்றார். அன்று இரவே சந்திரனுக்கு நெஞ்சுவலி வந்து அவர் உயிர் பிரிந்தது.



நமது சுயபெலத்தை நம்பி, இறைவனை மறந்துவிடுகிறோம். தன்னம்பிக்கை வேண்டும். அதோடு தேவகிருபை அவசியம். சுய பெலத்தை மாத்திரம் நம்புகிறவர்கள் ஏராளம். அதைச் செய்வேன், இதைச் சாதிப்பேன் என்று கூறுபவர்கள் பலர் உண்டு.




நாளை நடப்பது நமக்குத் தெரியாது. வசனம் 14ல் நமது ஜீவன் புகையைப் போன்றது. ஜீவன் மீது அதிகாரமுடையவர் கிறிஸ்து ஒருவர் தான். சுய நம்பிக்கை அழிந்துபோகிறது.



நாம் செய்ய வேண்டியது,

தேவனுடைய கிருபையை முன் நிறுத்தவாண்டும். ஆண்டவருக்குச் சித்தமானால், தேவன் எனக்கு ஆயுசை, பெலனை கொடுத்தல் இதைச் செய்வேன் என்று சொல்லவேண்டும்.



சிந்தனை: உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன். என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் - சொல்லுகிறோமா?


ஜெபம்: தேவனே உம்முடைய கிருபை ஒவ்வொரு நாளும் என்னைத் தாங்குவதாக. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யாருக்குக் கிருபை

வேதபகுதி:யாக்கோபு 4 : 5 - 6


தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். வசனம் 6



தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தாழ்மையாக நடக்கவே விரும்புகிறோம். ஆனால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே உள்ள சுயம் என்ற பெருமை குணம் நாம் தாழ்மையாக நடப்பதைத் தடுத்துவிடுகிறது. இதை ஒருவரும் மறுக்க முடியாது.



ஆதியில் சாத்தானும் தேவதூதனாயிருந்தவன் தான், பெருமையினால் கீழே தள்ளப்பட்டான். ஆதாமும் பெருமையினால் தன் தவறை ஒத்துக் கொள்ள இயலாமல் ஏவாள் மீதும் தேவன் மீதும் பழியைச் சாட்டுகிறான். நம்முடைய இரத்தத்திலேயே ஊறிப்போன நிறப்பெருமை, பணப்பெருமை, இனப்பெருமை ஆகியவை மாறித் தாழ்மை நமக்குள் வரும்போது மட்டுமே தேவகிருபையை நாம் பெற்றுக் கொள்ளத் தகுதியடைகிறோம்.




ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள்(1 பேதுரு 5:5) என்று வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்துவும் தன் வாழ்க்கையில் சரீரப்பிரகாரமாக இவ்வுலகில் அவரை வளர்த்த பெற்றாருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். பிலிப்பியர் 2 :8 ல் கூறியுள்ளபடி பிதாவுக்கும் கீழ்ப்படிந்தார், மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகித் தம்மைத் தாமே தாழ்த்தினார்.




சிந்தனை: கீழ்படிதலே தாழ்மை, தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை.


ஜெபம்: ஆண்டவரே என்னைத் தாழ்த்தி உம் பாதம் வருகிறேன், பெருமையை என்னை விட்டு அகற்றும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எதினால்?

வேதபகுதி:யாக்கோபு 4 : 1 - 4


உங்களுக்குள்ளே யுத்தங்களும், சண்டைகளும் எதினாலே வருகிறது. வசனம். 1



சண்டைகள் ஏன்? எதினால் என ஆராய்ந்து பார்க்கும்போது அவைகளின் அடித்தளமாக ஒரு மனிதனுடைய இச்சையே காணப்படும். இதையே வேதம் கூறுகிறது. ஆசை என்பது சாதாரணமானது. இச்சை என்பது அதை விட ஒரு படி மிகவும் மோசமானது.



தேவனிடம் நாம் ஜெபித்தால், நம்முடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். கேட்பதேல்லாம் கிடைத்துவிடும் என நாம் போதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது? "கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார். நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1). இதன் பொருள் என்னவென்றால் கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறபடியால் என்னை தேவையிலிருக்கவிடமாட்டார். எனவே தேவன் நம்முடைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றாமல் நம்முடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்றுகிறார்.



சாத்தானின் குணம் - இச்சை

சாதாரண மனித குணம் - ஆசை

சாதிக்கும் தேவ மனிதனின் குணம் - தேவ சித்தம்


ஆவிக்குரிய மனிதனின் குணம்: தேவனுடைய சித்தம், விருப்பம் ஆகியவற்றோடு இணைந்துவிடும்போது அந்த மனிதனின் விருப்பங்கள் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவைகளாயிருக்கும். என்வே அவைகள் எல்லாம் நிறைவேற்றப்படும். நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். (நீதி 10:24).




சிந்தனை: நாம் எப்படிப்பட்ட குணத்தை உடையவர்களாக இருக்கிறோம்?


ஜெபம்: தேவனே உம்முடைய இருதயத்தின் எண்ணங்களும் ஏக்கங்களும் என் விருப்பங்களாய் மாற கிருபை செய்யும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பரம ஞானம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 14 - 18


பரத்திலிருந்து வருகிற ஞானமோ....நற்கனிகளாலும் நிறைந்ததாயுமிருக்கிறது. வசனம் 17.



இக்காலத்தில் அன்பைக் குறித்து அதிகமாய்ப் பிரசங்கிக்கப்படுகிறது. இயெசு நாதர் வாழ்ந்து காட்டிய அன்பு, சத்தியத்தோடு இணைத்துப் பரத்திலிருந்து ஊற்றப்பட்டு ஞானிகளிடம் காணப்படுகிறது.



நோவா, மக்கள் கேலி செய்தபோதும், அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் மீது கொண்ட அன்பால் பேழையைச் செய்தான். மோசே இஸ்ரவேலரின் மீது கொண்ட அன்பால் திறப்பில் நின்றான். யோசேப்பு தன்னை வெகுவாய்ப் பகைத்த சகோதரர்களை அவர்கள் மீது கொண்ட அன்பினிமித்தம் பஞ்சத்தினின்று காப்பாற்றினான்.





கசப்பான வைராக்கியம், விரோதம், பொய் சொல்லுதல் பேய்த்தனமானது, பாதாளத்திலிருந்து புறப்பட்டு வருபவை. அசுத்தமானவை. ஆனால், பரமஞானம் பரத்திலிருந்து புறப்பட்டு வரும் ஞானம், இணக்கமுள்ளது, இரக்கமுள்ளது, சாந்தமுள்ளது. சமாதானத்திற்கு நேராய் வழிநடத்துவது.



நமது நாவு பரம ஞானத்தினால் நிறைந்திருக்குமானால் நீதியின் கனியாகிய அன்பையே வெளிப்படுத்தி, சமாதானத்தை நடப்பிக்கும்.



சிந்தனை: என்னுடைய செய்கைகள் பரம ஞானத்தால் நிறைந்திருக்கிறாதா?


ஜெபம்: ஆண்டவரே என்னுடைய செய்கைகள் , செயல்கள் உம்முடைய பரம ஞானத்தால் நிறைந்து அன்புடனும் சாமாதானத்துடனும் நடக்க கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நடத்தை

வேதபகுதி:யாக்கோபு 3 : 9 - 13


தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். வசனம் 13



ஒருவனுடைய தரம், அவனுடைய கிரியைகள் அல்லது நடக்கையினால் தெரிய வருகிறது. அவனுடைய உள்ளத்தில் இருப்பதே அவனுடைய பேச்சிலும். செயலிலும் வெளிப்படுகிறது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நாமும் நல்லவர்களானால், நல்லதையே பேசுவோம், நன்மையையே செய்வோம்.



நமது பேச்சும் செயலும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. பேச்சு வாயிலிருந்தும் செயல்பாடு உள்ளத்திலிருந்து வந்தாலும் அவை இரண்டும் ஒரே மனிதனின் தரத்தையே வெளிப்படுத்துகிறது. நாவினால் கடவுளைத் துதிக்கிறோம். அதே நாவினால் கடவுள் படைத்த மனிதனைச் சபிக்கிறோம். துதித நாவு தூற்றக்கூடாது. புகழ்ந்த நாவு இகழக்கூடாது. நாவின் செயல்பாடு இரண்டல்ல . ஒன்றே தேவை. இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது, செய்யவும் முடியாது. ஒன்றையே தெரிந்து கொள்ளவேண்டும். நல்லதையே செய்ய வேண்டும்.





ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இரண்டு வகையான ருசி தரக்கூடிய நீர் சுரக்காது. ஒருவகை மரம் மற்றொரு வகையான கனி தராது. நன்மையே செய்பவராகச் சுற்றித்திருந்த இயேசு நாதரின் பிள்ளைகள் தீய, தீமையான செயல்களைச் செய்யமாட்டார்கள் . துதித்தலும் சபித்தலும்; தித்திப்பும், கசப்பும் நம்முடைய நாவிலிருந்து வெளிவரமுடியாது. வெளிவரவுங் கூடாது. இரண்டல்ல ஒன்றே தேவை.



சிந்தனை: நான் நன்மையானவைகளை, நல்லவைகளைப் பேசிகிறேனா?


ஜெபம்: ஆண்டவரே நான் நல்லதைப் பேசவும் நல்லதைச் செய்யவும் என்னை வழினடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

விஷம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 7 - 8


நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாய் இருக்கிறது. வசனம் 8



மனிதனால் கூடாதது தேவனால் கூடும். தேவன் நமது நாவை அடக்கக் கூடும். நம்மால் கூடாத ஒன்றை, நடப்பிக்கக் கூடிய தேவனிடம் ஒப்படைக்க வேண்டும்.



நாவை ஏன் மனிதனால் அடக்கக்கூடாது? மனிதன் தனது அறிவாலும், ஆற்றலாலும் காட்டில் வாழ்வன, நாட்டில் வாழ்வன, கடலில் வாழ்வன அனைத்தையும் அடக்கி ஆள்கிற திறமையை, ஆசீர்வாதத்தை படைப்பிலேயே யானை, புலி, சிங்கம், காண்டாமிருகம், உருவத்திலும் சக்தியிலும் வல்ல, பெரிய அனைத்து விலங்குகளையும் அடக்கிக் கீழ்ப்படுத்திவிட்டான் (ஆதியாகமம் 1 :26).





ஆனால் நாவை மட்டும் அடக்க மனிதனால் ஏன் முடியவில்லை. நாவு கொடியது, அது நஞ்சு போன்றது. நாவில் இருந்து புறப்படும் வார்த்தைகள் விஷம் நிறைந்ததாக இருப்பதால் அது பிறரை மனமடிவாக்கி சோர்வுறச் செய்து செயல்படவிடாமல் முடமாக்கிவிடுகிறது.



ஆனால் விசுவாசிகளான நாம் விஷம் நிறைந்த நம் நாவை கிறிஸ்துவின் கிருபையினால் அடக்கி ஆளும் போது நாம் தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளமுடியும்.



சிந்தனை: நாம் நம்முடைய நாவை எப்படிப் பயன்படுத்துகிறோம்?


ஜெபம்: தேவனே என் நாவை உம்முடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதற்குப் பயன்பட பெலத்தையும் ஞானத்தையும் தந்து வழிநடத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கடிவாளம்

வேதபகுதி:யாக்கோபு 3 : 1 - 3


ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷன். வசனம் 2



நமது உடலில் உள்ள உறுப்புகளில் நாவு மிகவும் சிறியது. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்கிறது. மனிதனின் நற்கிரியை அல்லது துற்கிரியைகளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.



ஒரு பெரிய கொடிய முரட்டுக் குதிரையின் வாயில் ஒரு கடிவாளம் பொட்டு அதை நமக்கேக் கீழ்ப்படிய வைத்து விடுகிறோம். நாம் சொல்லுகிற வேலையைச் செய்கிறது. நாம் சொல்கிற திசையில் செல்கிறது. குதிரை ஒரு பலமுள்ள மிருகம். எந்திரங்களின் சக்தியைக் குதிரையின் பலத்தோடு ஒப்பிட்டு அறிகிறோம். போர்களிலும், வண்டி இழுப்பதற்கும் குதிரைகளைப் பயன்படுத்தினோம். குதிரையின் பலமும், இயக்கமும் கடிவாளத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது.





நமது நாவைப் பயன்படுத்திக் கடவுளைத் துதிக்க வேண்டும். புகழ வேண்டும், பிறரைப் பாராட்ட வேண்டும், சிந்தித்துப் பேசுங்கள், சிறந்ததையே பேசுங்கள்.



சிந்தனை: நான் நாவடக்கமுள்ள விசுவாசியா?


ஜெபம்: தேவனே நான் பூரணமாய் வாழ பெலனும் தூய மனமும் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

உயிருள்ள விசுவாசம்

வேதபகுதி:யாக்கோபு 2 : 14 - 26


கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது. வசனம் 20.



ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையிலும் விசுவாசம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். பெரும்பாடுள்ள பெண், குஷ்டரோகி ,குருடன் ஆகியோர் விசுவாசத்தினால் பிணி நீங்கிச் சுகம் பெற்றதைத் திருமறையில் வாசிக்கிறோம். கடுகளவு விசுவாசம் இருந்தால் கூட மலையைப் பெயர்த்துக் கடலுக்குள் போகச் செய்துவிடலாம். விசுவாசம் அந்த அளவுக்கு வலிமையானது.



ஆனால் விசுவாசம் நமது வாழ்வின் செயல்பாடுகளில் வெளிப்படவேண்டும். விசுவாசத்தின் கனியாகிய அன்பு நமது அன்றாட வாழ்வில் பொங்கி வழிய வேண்டும். இல்லையென்றால் விசுவாசம் செத்ததாகி விடும். இயேசுநாதர் தன்னிடம் நம்பி வந்த மக்களை வெறுமையாய் அனுப்பாமல் சுகம் கொடுத்து வயிறார உணவு கொடுத்தே அனுப்பினார்.





நாமும் நம்மிடம் வரும் மக்களுக்குத் தேவையான உதவிகளையும் நன்மைகளையும் செய்ய வேண்டும். வெறும் இனிமையான வார்த்தைகளால் எவ்வித பயனுமில்லை. ஆதித் திருச்சபையில் விசுவாசியாகிய கொர்நேலியு தன்னிடம் வந்த மக்களுக்கெல்லாம் தான தருமங்கள் செய்தான் என்று வாசிக்கிறோம். இப்படிப்பட்ட நற்காரியங்கள் மூலமே அநேகர் ஆண்டவரிடம் வழி நடத்தப்பட்டனர்.



சிந்தனை: கர்த்தருடைய நாமத்தை நம்முடைய நற்காரியங்கள் மூலமாக மகிமைப்படுத்தி, பிற மக்களை ஆதாயம் செய்கிறோமா?



ஜெபம்: ஆண்டவரே உம்மை விசுவாசிப்பதைக் கிரியைகளில் காட்ட எனக்கு உதவி புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ராஜரீகப் பிரமானம்

வேதபகுதி:யாக்கோபு 2:8 - 13


உன்னிடத்தில் நீ அன்புகூறுகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக வசனம் 8.



உலகில் சட்டங்கள் முக்கியம். சட்டங்களைக் கைக்கொண்டு கீழ்ப்படிய வேண்டும். சட்டங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குத் தண்டனை உண்டு.



பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் பயணிக்கிறோம், நாம் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தால் நமக்குத் தண்டனை. பயணச்சீட்டு இருந்தால் மட்டும் போதாது, உரிய பயணச்சீட்டு வேண்டும்.





சட்டங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எல்லாச் சட்டங்களும் முக்கியமானவை. ஒன்றுக்குக் கீழ்ப்படிந்து மற்றொன்றிற்குக் கீழ்ப்படியாமலிருக்க முடியாது. ஒன்றைக் கைக்கொண்டு மற்றொன்றைக் கைக்கொள்ளாமலிருக்க முடியாது.



கிறிஸ்தவர்கள் மனிதர்களுக்கும் இறைவனுக்கும் முன்பாக நீதியாக நடக்க வேண்டும். அது அன்பினால் மட்டுமே முடியும்.



இறையரசின் சட்டங்கள் திருமறையில் உள்ளன. திருமறையை நன்கு படித்து அவற்றை அறிந்து கொள்ளுவோம். அதன்படி அனைத்துக்கும் கீழ்ப்படிவோம். தேவன் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்ற வேதவசனத்தின் படி நாம் இறைவனிடத்திலும் மற்ற மனிதர்களிடத்திலும் அன்பு கூறுவோம்.




சிந்தனை: பிறரிடம் நான் காட்டும் அன்பு என்னிடத்தில் நான் காட்டும் அன்புக்குச் சமமானதா?




ஜெபம்: ஆண்டவரே என்னில் நான் அன்புகூறுவது போல உம்மிடத்திலும் பிறரிடத்திலும் அன்பு கூற கிருபை தாரும். ஆமேன்




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்



Blog Directory

பட்சபாதம்

வேதபகுதி:யாக்கோபு 2 : 1 - 7


விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக வசனம் 1



ஆள்பார்த்துச் செயல்படுதல் மனிதர்களின் இயற்கையான குணங்களுள் ஒன்று. இறைமக்களுக்குள்ளும், திருச்சபையிலும் இப்பண்பு விசுவாசிகள் நடுவே காணப்படுவதைக் கண்ட யாக்கோபு வேதனையோடு எச்சரிக்கிறார். ஏழை, செல்வந்தர்; வேண்டியவர், வேண்டாதவர்; உறவினர், உறவினர் அல்லாதோர் என்று பட்சபாதம் காட்டுகிறோம்.



ஆவியின்படி பிறந்த நாம் சமமாக்கப்பட்டவர்கள். நாம் நமக்குள் ஏற்றத் தாழ்வு பாராட்டக்கூடாது. விசுவாசத்தையும், பக்தியையும் பாரபட்சம் சீர் குலைத்துவிடும். கடவுள் பட்சபாதமுள்ளவர் அல்ல.




பணமும், அந்தஸ்தும், உறவும், ஜாதியும் விசுவாசிகள் நடுவே பெயரளவில் கூட காணப்படக்கூடாது. பட்சபாதத்தின் அடிப்படையில் ஒருவரை உயர்வாக மதிப்பதும், ஒருவரைத் தாழ்வாக கனவீனப்படுத்துவதும் கிறிஸ்துவின் போதனைக்கு எதிரானது. தேவசாயலில் படைக்கப்பட்ட மனிதர்களிடையே பட்சபாதம் காட்டுவது தீய நோக்கத்தை உள்ளடக்கியது. தன்னலத்தைப் பிரதானமாகக் கொண்டது. ஆகவே நாம் ஒருவருக்கொருவர் பட்சபாதம் காட்டாமல் நாம் தேவசாயலில் படைக்கப்பட்டவர்கள் என்று எண்ணி ஒருவர் பேரில் ஒருவர் சமமாக அன்புகூரக்கடவோம். தேவன் அன்புள்ளவராயிக்கிறார்.




சிந்தனை: நாம் எப்படிப்பழகுகின்றோம்? சமமாகப் பழகுகின்றோமா? அல்லது பட்சபாதம் உள்ளவர்களாகப் பழகுகின்றோமா?



ஜெபம்: தேவனே திருமறையின் அடிப்படையில் அனைவரிடமும் சமமாகப் பழக அருள்புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பூரண நன்மை

வேதபகுதி:யாக்கோபு 1 : 16 - 18



நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்......பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது வசனம் 17




பூரணம் என்பது உறுதிப்பட்ட நிலை என்பதாகும். ஒரு மண்பானை (அ) செங்கல் பூரணமாக வேகாவிட்டால் அது ஒரு பொருளாகக் காட்சியளித்தாலும், அவை சீக்கிரமாகப் பயனற்றதாகிவிடும். உணவுப் பொருளும் பூரணமாக வேகாவிட்டால் நன்மை பயக்காது. உடல் நலக்கேடு ஏற்படுத்தும்.




ஒரு கட்டடம் பூரணமாக வேலை முடிந்தபின் பார்த்தல் தான் அழகு காணப்படும். கல்வியிலும் பூரணமாகத் தேறாவிடில் வேலை கிடைப்பது கடினம். மேற்படிப்பு படிப்பதற்கும் முடியாது. அது போல ஆண்டவருக்குள் நாம் பூரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எதில் எல்லாம் என்று பார்ப்போமானால்



  • சற்குணத்தில் பூரணப்படவேண்டும் - மத்தேயு 5:40



  • பரிசுத்தமாக்குதலை தேவபயத்தோடு பூரணப்படுத்த வேண்டும் 1 கொரிந்தியர் 7 :1



  • பொறுமையில் பூரணராக இருக்க வேண்டும் - யாக்கோபு 1 :4



  • விசுவாசத்தில் பூரணமாயிருக்க வேண்டும் யாக்கோபு 2 :22



  • உலகுக்குப் பயப்படாத பூரண அன்பு பெற வேண்டும் - 1 யோவான் 4 :18





ஆண்டவரே நம்மைப் பூரணப்படுத்துகிறார். மனிதனின் பாவம் தேவனுக்கும் நமக்கும் தடுப்புச் சுவர். பாவ மன்னிப்புக்காக ஓரே பலியாக ஏசுவைப் பிதாவானவர் அனுப்பி, நமக்கும் அவருக்கும் உள்ள தடைகளை நீக்கி நம்மைப் பரிசுத்தமாக்கி பூரணப்படுத்தி இருக்கிறார் என்று அறிந்து கர்த்தரைத் துதிப்போம். அவர் நம்மைப் பரிபூரண ஆசிர்வாதங்களால் நிரப்புகிறவர் என்று அறிந்து நன்றி செலுத்துவோம்.




சிந்தனை: அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினார்(பூரணப்படுத்தினார்).


ஜெபம்: ஆண்டவரே, என்னை உம்முடைய நன்மையினால் பூரணப்படுத்தி உமது இரத்தத்தினால் கழுவி சுத்தப்படுத்தும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஐசுவரியம் வாடுமோ

வேதபகுதி:யாக்கோபு 1 - 9 - 11


பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான் வசனம் 2



யாக்கோபு நிருபம் மற்ற நிருபங்களிலிருந்து வித்தியாசமானது. இந்த நிருபத்தில் கிருபைக்குரிய கிரியை செய்ய வேண்டிய செயல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் நம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய காரியங்கள் ஆகும். ஐசுவரியத்தைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதீர்கள் (சங்கீதம் 62:10). தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் (நீதிமொழிகள் 11:28)



கி.பி. 1900ல் மார்ட்டின் என்ற ஏழ்மையான விவசாயி அமெரிக்காவிலுள்ள நியுயார்க்கில் வாழ்ந்து வந்தார். தேவபக்தியுள்ள மனிதர். ஆலயம் செல்வதில் தவறுவது இல்லை. தனக்கு வருமானம் உண்டாயிருக்க்கப் பால்மாடு ஒன்றை விலைக்கு வாங்கினார். பால்பண்ணை பெருகியது. பெரும் தனவந்தன் ஆனார். இறைவனை விட்டு விலகி, பால்பண்ணையே கதி என முழுவதும் அதிலே தனது நேரத்தைச் செலவு செய்தார். ஒருநாள் மாடுகளுக்குத் தண்ணிர் காட்டச் சென்றபோது ஒரு மாடு தவிர அனைத்தும் செத்துக்கிடந்தது. உள்ளம் உடைந்தது. அவரால் ஜீரணிக்க முடியவில்லை.




தன் தவறை உணர்ந்தார். இறைவனிடம் தன் தவறை அறிக்கை செய்து மீண்டும் தன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 3:8ன் படி ஐசுவரியத்தை நம்பிக் கெட்டுப்போனேன் என்று அங்கலாய்த்தார்.




சிந்தனை: கர்த்தரானவர் தம்மைத் தொழுது கொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராய் இருக்கிறார். ரோமர் 10:12


ஜெபம்: ஆண்டவரே ஐசுவரியத்தை விரும்பி, நாடி ஓடாமல் வாடாத கிரீடத்தைப் பெற உம்மை நாடி ஓடி வரக் கிருபை செய்யும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஞானம் கிடைக்கும்

வேதபகுதி: யாக்கோபு 1: 5 - 8


உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். வசனம் 5



கல்லூரியில் படிக்கும் வாலிபன் தனது கல்லுரிப்படிப்பில் இரண்டு முறை தோல்வியடைந்தான். இந்தத் தோல்வியால் அவனுக்கு வாழ்க்கை கசந்தது. மன நிம்மதியில்லாமல் இருந்தபோது அவன் இயேசுவை அறிந்தான். தன் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டுப் புதிய வாழ்வு பெற்றான்.



இப்பொழுது அவன் உள்ளத்தில் ஒரு புதிய நம்பிக்கை உண்டானது. இனி நான் தேவனுடைய பிள்ளை. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்(நீதிமொழிகள் 2:6). எனவே அவர் எனக்கு உதவி செய்வார் என நம்பினான். ஊக்கமாக ஜெபித்தான், படித்தான், பட்டம் பெற்றான்.




நமது ஆண்டவர் ஞானத்தை சாலமோன் ராஜாவுக்கு மட்டுமல்ல, விசுவாசத்தோடு கேட்கிற யாவருக்கும் கொடுக்க மனதுள்ளவர். அவர் பட்சபாதமுள்ளவர் அல்லவே.



கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்(மத்தேயு 7 : 7,8).



கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஞானத்தையும் புத்தியையும் வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.




சிந்தனை: தேவனுக்குப் பயந்து ஜீவிப்போமானால், இவ்வுலக வாழ்விற்குரிய ஞானத்தையும் நித்திய வாழ்வையும் நமக்குத் தந்து ஆசிர்வதிப்பார்.


ஜெபம்: தேவனே உமக்குப் பிரியமாய் நடக்க ஞானமுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பரீட்சை

வேதபகுதி: யாக்கோபு 1 : 1 - 4


என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் வசனம் 2,3



பொதுவாகப் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும் சோதனைகளில் மாணவர்கள் தவறாது கலந்துக் கொள்ளும்போது இறுதித் தேர்வில் அவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்துத் தேர்ச்சிபெறுகிறதை அறிந்திருக்கிறோம்.



வாழ்க்கை என்னும் பள்ளியில் நாம் பல பாராட்டுகளுக்கு உட்படும்போது பல பிரச்சனைகள். துன்பங்கள் மூலம் நாம் சோதிக்கப்படும்போது நம்முடைய விசுவாசம் பரீட்சிக்கபடுகிறது. நான் உபத்திரவப்பட்டது நல்லது அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக் கொள்கிறேன் என்று சங்கீதக்காரன் கூறுகிறார்.




இயேசு 40 நாள் உபவாசிக்கும்போது அவருக்கு சோதனை வந்தது. உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சைபாராதிருப்பாயாக என்றார்.



இயேசு கிறிஸ்து நம் வாழ்க்கையின் முன்பாதிரி. அவரைப்போல சோதனை நேரத்தில் பொறுமையோடு இருப்போம். விசுவாசத்தைக் காத்துக் கொள்வோம்.




சிந்தனை: உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மைபாரட்டுகிறோம்.


ஜெபம்: ஆண்டவரே எங்கள் உபத்திரவத்தில் பொறுமையோடு இருந்து விசுவாசத்தைக் காத்துக் கொள்ள பெலன் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

அவர் ஆண்டவர்

வேதபகுதி: ஆமோஸ் 9 : 1 - 6


கர்த்தர் என்பது அவருடைய நாமம். வசனம் 6



பள்ளிக்கூடங்களில் சிறுபிள்ளைகளிடம் தேசப்பிதா காந்தியடிகள் படத்தைக் காட்டி இவர் யார் என்று கேட்டால் உடனே தேசப்பிதா என்றும் அறநெறி வழிகாட்டி என்றும் காந்தி தாத்தா என்றும் பலவிதமான உறவுகளை வெளிப்படுத்தி பிள்ளைகள் பதில் அளிப்பர். அந்த பதிலில் இருந்து உறவை அறிந்து கொள்ள முடியும்.



இங்கோ ஆண்டவர் தம்மைக் குறித்து இஸ்ரவேல் மக்களிடத்தில் நான் உங்களை ஆளுகிறவர் என்று உரைக்கிறார். இஸ்ரவேலரின் வாழ்வில் எல்லாமுமாக இருந்த கடவுள் அவர்களது பித்தலாட்ட வாழ்வு நெறியைப் பார்த்து அவர்களை தண்டிக்க விழைவதை வசனம் கூறுகிறது. பகலின் மேகத்தினாலும் இரவில் அக்கினியினாலும் பாதுகாத்து வழிநடத்தி வாழ்வு தந்த அவர்களின் கடவுள் இப்பொழுது அவர்களை எச்சரிப்பதை காண்கிறோம்.




கர்த்தர் சர்வவல்லவர். அவருக்கு ஒன்றும் மறைவில்லை. உலகத்தையும், உலகத்தில் உள்ளவைகளையும் அண்டசராசரங்களையும் படைத்து ஆளுகை செய்து வருபவர். அவர்தான் இயற்கையைப் படைத்தவர். அதுமட்டுமல்ல தவறு செய்கிறவர்களைத் தண்டிக்கிறவர்.



நமது வாழ்வில் கடவுள் மன்னிக்கிறவர் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளதால் நாம் தவறு செய்வதற்கு அஞ்சுவதில்லை. ஆண்டவரின் கண்களுக்கு மறைவாக மனிதர்கள் எங்கும் ஓடி ஒளிந்து கொள்ள முடியாது. நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நமது வாயின் வார்த்தைகளையும் கடவுள் கவனித்துக் கொண்டே இருக்கிறார். நாம் அவருக்குக் கடைசி நாளில் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.




சிந்தனை: கர்த்தர் மன்னிக்கவும், தண்டிக்கவும் அதிகாரம் உடையவர்.


ஜெபம்: தீய வாழ்வில் இருந்து என்னை விடுவித்துக் காத்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

புதிய பஞ்சம்

வேதபகுதி: ஆமோஸ் 8 : 11 - 14


கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை ஆனுப்புவேன். வசனம் 11



இங்கே ஆண்டவர் சொல்லும் பஞ்சம் உண்வுப் பஞ்சமல்ல. தண்ணீர் பஞ்சமல்ல. இவையெல்லாம் மனித சரீர வாழ்வுக்குரியவை. அதைவிட மேலான பஞ்சத்தைப் பற்றி கடவுள் குறிப்பிடுகிறார். அது என்ன? கர்த்தருடைய வார்த்தைக்கு பஞ்சம். இது எதைக் குறிக்கிறது? இஸ்ரவேலரின் வாழ்வில் கடவுளுடைய உறவு அறுபட்ட நிலையைக் குறிக்கிறது. கல்லுகளை அப்பங்களாக மாற்றும் என்ற சோதனைக்காரனுக்கு ஜீவ அப்பமாகிய இயேசு மனிதன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்றாரே அந்த தேவனுடைய வார்த்தைக்குத் தான் பஞ்சம்.



அந்நாட்களின் நாட்டின் பொதுப் பிரச்சனைகளுக்கும் தேவைகளுக்கும் ஆண்டவரின் சித்தத்தை அறியவும் வழிநடத்துதல்களைப் பெறவும் மக்களும் அரசனும் தீர்க்கதரிசிகளை நாடிச் செல்வது வழக்கம். இறைவன் தமது வார்த்தைகளை அவர்களுக்கு வெளிப்படுத்துவார். மக்கள் பெற்று மனமகிழ்வர்.




ஆனால் இப்போதே அதற்குப் பஞ்சம் வரும் என கடவுள் உரைப்பது ஏன்? இஸ்ரவேல் மக்கள் பலமுறை கடவுளுடைய வார்த்தைகளையும் வழி நடத்துதல்களையும் புறக்கணித்து விட்டனர்.



இதுவே தேவன் தரும் மாபெரும் தண்டனை.




சிந்தனை: நீர் விளம்பின வேதமே நலம்.


ஜெபம்: இறைவா உம் வார்த்தையைக் கேட்டு அதின் படி நடக்க எனக்கு உதவி புரியும் . ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

கசப்பு மிக்க நாள்

வேதபகுதி: ஆமோஸ் 8 : 9 - 10


அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். வசனம் 10



2004 டிசம்பர் 26. மறக்கமுடியாத நாள் மிகுந்த உயிர்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி மக்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கிய நாள். சுனாமி தாக்கிய கசப்பான அனுபவம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.



இங்கே ஆண்டவரும் இஸ்ரவேலர் எதிர்பார்த்து காத்திருந்த நாளை கசப்பான நாளாக்குவேன் என்கிறார். இஸ்ரவேலருடைய வாழ்வில் கர்த்தருடைய நாள் மகிழ்ச்சியின் நாள். விடுதலையின் நாள். காரணம், அந்நாளில் இஸ்ரவேலருக்கு நன்மை, ஆசிர்வாதம், மீட்பு, வெளிச்சம் உண்டென்றும், இஸ்ரவேலரைப் பகைப்பவர்களுக்குத் தீமை, அழிவு என்றும் இஸ்ரவேலர் நம்பினர். ஆண்டவரும் தம்மை இஸ்ரவேல் மக்களுக்கு வெளிப்படுத்தி அவர்களது வரலாற்றிலே செயலாற்றியதால் கர்த்தருடைய நாள் அவர்களுக்கு நம்பிக்கையின் நாள் மட்டுமல்ல களிகூறுதலின் நாள்.




ஆனால் அந்தோ பரிதாபம் அவர்களது எதிர்பார்புக்கு எதிர்மாறாக ஆண்டவர் வாக்கு உறைக்கிறார். ஏன்? இஸ்ரவேலரின் மாய்மாலமான வழிபாட்டைக் கடவுள் வெறுக்கிறார்.



அநீதி நிறைந்த சமூக சமய வாழ்வை கடவுள் முடிவுக்குக் கொண்டு வருகிறார். நடக்கப்போவது என்ன? மக்கள் புலம்பி தவிக்கப் போகிறார்கள். மக்கள் கைவிடப்பட்ட நிலைக்கு தள்ளப்படப்போகிறார்கள்.



கடவுளின் தண்டனைக்கு யாரும் தப்பமுடியாது. போலியான வாழ்வு. வெளிவேஷமான கடவுள் பக்தி நம்மை கடவுளின் பிள்ளைகளாக்கமாட்டாது. தண்டனை நிச்சயம் உண்டு. ஆகவே இன்றே மனந்திரும்பு.





சிந்தனை: உண்மை வழி நடந்திடும் உத்தமனுக்குக் கர்த்தர் துணை.


ஜெபம்: கடவுளே, சுத்த இருதயத்தை எனக்குத் தாரும். நிலைவரமான உமது தூய ஆவியால் என்னை புதுப்பியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எளியவனின் விலை

வேதபகுதி: ஆமோஸ் 8:4- 8


தரித்திரரைப் பணத்துக்கும் எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும்...வசனம் 5



உலக வரலாற்றில் கருப்பு இன மக்களை சந்தைகளில் கால்நடைகளைப் போல் விற்று, சிறுமைப்பட்டவர்களை, ஏழை எளிய மக்களை இழிவாக நடத்திய செயல்களை நாம் நன்கு அறிவோம்.



இஸ்ரவேல் நாட்டிலும் பணக்கார வியாபாரிகள் ஏழை எளிய மக்களைப் பல வழிகளில் துன்புறுத்தினர் . சிறுமைப்பட்ட மக்களை ஒடுக்கினர். எப்படியென்றால் அவர்களது வியாபாரத்தில் உண்மை காணப்படவில்லை. கள்ள தராசு, அளவைகள் , எடைக்கற்கள் பயன்படுத்தப்பட்டன, உணவுப் பொருட்களிலே உதவாத குருணை முதலியவற்றை கலந்து வியாபாரம் செய்தனர். ஏழைகளிடம் இவைகளை வாங்கும்போது எடையளவை அதிகமாக்கியும் விற்கும்போது குறைந்த எடையளவை பயன்படுத்தி கொள்ளையடித்தனர். இப்படிப்பட்ட வியாபாரிகளைக் கடவுள் எச்சரிக்கிறார். ஏனென்றால் நம்முடைய தேவன் நீதிபரர்.




இன்றைய வாழ்விலும் நமது உலகில் எங்கும் இன்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுகின்றன. உணவுப் பொருட்களில் கலப்படம் உயிருக்கே ஆபத்து எனத் தெரிந்தும் துணிகரமாய்க் கலப்படம் செய்கின்றனர்.



கள்ளக்கடத்தல் நடைபெறுகிறது. இவைகள் யாரைப் பாதிக்கிறது? எளியவர்களை அல்லவா? தேவன் எளியவர்கள் பக்கம் என்பதை மறந்து விட வேண்டாம்.



சிந்தனை: எளியவனுக்குக் கர்த்தர் துணை


ஜெபம்: தேவனே எளியவர்களை என்னுடைய வாழ்க்கையில் நேசிக்க உதவிபுரியும்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

சிறுத்துப் போனான்

வேதபகுதி: ஆமோஸ் 7 : 1 - 3


யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப் போனான் வசனம் 2



ஆண்டவர் மனிதனைப் படைத்து பின்பு அவர்களைப் பார்த்து நீங்கள் பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள் என்று ஆசிர்வதிதார். ஆனால் மனிதனோ தேவகிருபை இழந்து தேவசாயலை இழந்து சிறுத்துப் போனான்.



இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் அன்பும், இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்தவர் என்று தேவனின் ஒரு பக்க குணங்களைச் சொல்லி தங்களைத் திரும்பத் திரும்ப பாவத்திற்கு அடிமைகளாக்கினர். அதே நேரத்தில் நீதியுள்ள நியாயாதிவதி என்பதை மறந்து நியாயத்தைப் புரட்டி அநியாயம் செய்ததினாலே தேவன் அவர்கள் மீது தமது கோபத்தை ஊற்றினார்.




மேலும் நம் சிறுமை நீங்க அவரைப் பற்றி அறியும் அறிவில் வளர வேண்டும் (2 பேதுரு 1 : 2 ). அவரைப்பற்றி நாம் அதிக ஞானமும், அவருடன் அதிக ஐக்கியமுங்கொள்ளும்போது ஈசாக்கைப் போல மகாபெரியவர்களாவோம் ( ஆதி 26:13)



சிந்தனை: தேவனின் அறிவு வேதனை மறைவு.


ஜெபம்: ஆண்டவரே உம்மை அதிகம் அறிந்துகொள்ள பிரகாசமுள்ள மனக்கண்களைத்தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பாவத்தின் சம்பளம்

வேதபகுதி: ஆமோஸ் 6 : 8 - 14



பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார். வசனம் 11



இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்து ஆண்டவரின் கோபம் அவர்களின் மீது எழுந்ததினால் சாபத்திற்குள்ளானார்கள். இஸ்ரவேலரின் மேன்மைகள் தேவனாகிய கர்த்தரால் வெறுக்கப்பட்டது.



இஸ்ரவேல் ஜனங்கள் தேவன் அன்பும், இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்தவர் என்று தேவனின் ஒரு பக்க குணங்களைச் சொல்லி தங்களைத் திரும்பத் திரும்ப பாவத்திற்கு அடிமைகளாக்கினர். அதே நேரத்தில் நீதியுள்ள நியாயாதிவதி என்பதை மறந்து நியாயத்தைப் புரட்டி அநியாயம் செய்ததினாலே தேவன் அவர்கள் மீது தமது கோபத்தை ஊற்றினார்.



சங்கீதக்காரனாகிய தாவீது கூறுகிறார்; அவர் பூலோகத்தாரை நீதியோடும் சகல ஜனங்களை சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார் என்று கூறுகிறார். எனவே நாம் அனைவரும் நியாயத்தீர்ப்பிற்கு உள்ளானவர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எனவே அவருடைய நியாயத்திற்குப் பயந்து அவருடைய நீதிக்கு கீழ்ப்படிந்து வருகின்ற கோபாக்கினைக்கு நம்மை தப்புவித்து அவரோடு நீதியாய் ஆளுகை செய்வோம்.



சிந்தனை: தேவன் அன்புள்ளவர் என்றாலும் அவர் நீதியுள்ள நியாயாதிபதி. எனவே நீதிபதியாம் தேவனுக்கு முன்பாக நடுங்குவோம்.


ஜெபம்: உமது நீதிக்கும், நியாயத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்க ஞானமுள்ள இருதயத்தைத் தாரும் .ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

வன்முறை தர்பார்

வேதபகுதி: ஆமோஸ் 6 : 1 - 7



தீங்கு நாள் தூரமென்றென்னி கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து... வசனம் 3



இஸ்ரவேல் ஜனங்கள் உல்லாசமான வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அவர்களது வாழ்க்கை விபச்சாரத்தாலும், வேசித்தனத்தாலும், தீய சிந்தனைகளாலும் தங்களைக் கறைப்படுத்திக் கொண்டு தீய செயலுக்கு உள்ளானார்கள்.



மதுபானத்தினால் வெறிகொண்டு வன்முறை போன்ற முறைகேடற்ற செயல்களைச் செய்து சோரம் போனார்கள்.



இஸ்ரவேல் ஜனங்கள் தீங்கு நாட்கள் தூரமென்றெண்ணி கொடுமையின் ஆசனங்கள் தாங்களைக் கிட்டிவரும்படிச் செய்தார்கள்.



பிரியமானவர்களே தேவன் நம்மை அசுத்தத்திற்கு அல்ல, பரிசுத்தத்திற்கென்றே அழைத்திருக்கின்றார். சிறு சிறு பாவங்கள் கூட நம்மை அடிமைப்படுத்திவிடாதபடிக்கு பரிசுத்தமாகவே வாழ அழைத்திருக்கிறார்.



தேவன் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவர். ஆகவே பிரியமானவர்களே, நம்முடைய பாவங்களை அவருக்கு முன்பாக அறிக்கையிடுவோம். நம்முடைய பாவத்தின் மூலம் அவரைக் கோபப்படுத்தாதிருப்போம். ஏனென்றால் தாவீது கூறுகிறார். அவருடைய கோபம் ஒரு நிமிடம் அவருடைய தயவோ நீடிய வாழ்வு. ஆகவே அவரது தயவை நாடி இரக்கத்தைப் பெற்றுக் கொள்வோம்.




சிந்தனை: தீங்கு நாள் தூரமல்லவே. நாம் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம். ஆகவே தீங்குநாளுக்கு முன் மனந்திரும்பி அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளுவோம்.


ஜெபம்: கர்த்தாவே, உமது ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்க எனக்கு உதவி செய்யும். ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

வீண் ஆசரிப்புகள்

வேதபகுதி:ஆமோஸ் 5 : 21- 27


உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. வசனம் .21



இஸ்ரவேல் ஜனங்களின் பண்டிகை பலிகளைத் தேவன் வெறுக்கிறார். பலியைப் பார்க்கிலும் நீதியும், உண்மையும், மனத்தாழ்மையுமான வாழ்க்கை வாழ்வதையே தேவன் விரும்புகிறார்.



மீகா 6:8ல் கூறப்பட்டிருக்கிறது; மனுஷனே, நன்மை இன்னதென்று தேவன் நமக்கு அறிவித்திருக்கிறார்.



எது எளிமையான காரியங்கள்
1. நியாயஞ்செய்தல் 2.இரக்கத்தை சிநேகித்தல் 3. தேவனுக்கும் மனிதருக்கும் முன்பாக மனத்தாழ்மையாய் நடத்தல். இவைகளே பலியைப் பார்க்கிலும் பண்டிகையைப் பார்க்கிலும் தேவனுக்குப் பிரியமானவைகள்.



ஒரு அரசு அலுவலகத்தில் நேர்மையாய்ப் பணியாற்றிக் கொண்டிருந்த கிறிஸ்தவ சகோதரர் ஒருவர் அவரது மேலதிகாரியால் அநேக உபத்திரவங்கள் அனுபவித்தார். ஆனாலும் இந்த சகோதரர் தன் நேர்மையில் இருந்து சற்றும் வழிவிலகவில்லை. நன்மையே செய்து கொண்டு இருந்தார். ஆண்டவர் அவரைக் கனப்படுத்தி வேறு ஊருக்கு மாற்றம் கிடைக்கச் செய்தார். பொறுப்புகளில் பொறுமையாய், மனத்தாழ்மையாய், உண்மையாய் இருங்கள். கர்த்தரால் உயர்த்தப்படுவீர்கள்.




சிந்தனை: தன்னைத்தான் தாழ்த்துகிற எவனும் உயர்த்தப்படுவான். கர்த்தருக்குள் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார்.


ஜெபம்: தேவனே நியாயஞ்செய்து இரக்கத்தைச் சிநேகித்து உமக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கப் பெலன் தாரும் . ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்


Counter Stats
newcastle accountants
newcastle accountants Counter

நாடு- தேடாதே

வேதபகுதி:ஆமோஸ் 5:4 - 17


நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையில் விழப்பண்ணுகிறவர்களே அவரைத் தேடுங்கள். வசனம் .7




இஸ்ரவேல் ஜனங்கள் பெத்தேலைத் தேடினார்கள். கில்காலில் போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் விக்கிரகங்களைத் தேடி ஓடினார்கள். ஆகவே அவர்களைப் பார்த்து ஆமோஸ் தீர்க்கன் கூறுகிறார்; கர்த்தரைத் தேடுங்கள் அப்போது பிழைப்பீர்கள்.



கர்த்தரைத் தேடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நாளாகமம் 28:9ம் வசனத்தில் கூறப்பட்டிருக்கிறது, நீ அவரைத் தேடினால் அவர் உனக்குத் தென்படுவார். பிரியமானவர்களே ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தவரும், பூரண அழகுள்ளவரும், சாரோனின் ரோஜாவாகுமாகிய தேவன் நமக்குத் தென்படுவது எவ்வளவு பெரிய பாக்கியம். நாம் அவரைத் தேடும் போது அவர் நமக்குத் தென்பட்டு நமக்கு ஆலோசனை தந்து வழி நடத்துவார்.



மத்தேயு 7:7 ல் கூறப்பட்டிருக்கிறது கேளுங்கள் அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள் அப்பொழுது கண்டடைவீர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த நாட்களில் ஐசுவரியத்தைத் தேடும் படியாக நாமாகவே பலவழிகளைத் தேடி தேவனை மறந்து விடுகிறோம். நாம் தேவனைத் தேடினால் தேவன் நமக்கு வைத்திருக்கும் ஐசுவரியத்தைக் கண்டடையச் செய்வார்.





சிந்தனை: வாலிபனே வசதிகளைத் தேடி ஓடாதே, கர்த்தரைத் தேடு. அவர் ஆசிர்வாதத்தின் கதவுகளை உனக்குத் திறப்பார்..


ஜெபம்: கர்த்தாவே உம்மைத்தேடி உமக்குள் பிழைத்திருக்க உதவி செய்வீராக. ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்


Counter Stats
newcastle accountants
newcastle accountants Counter

சோகக்கதை

வேதபகுதி:ஆமோஸ் 5 :1 - 3


இஸ்ரவேல் தன் தேசத்தில் விழுந்து கிடக்கிறாள். அவளை எடுப்பாரில்லை வசனம் 2



நம்மை நோக்கிக் கடந்து வருகிற பிரச்சினைகளைக் கண்டு சோர்வடைந்து கலங்கி இந்த உலகத்தின் யாத்திரையிலே சோகத்தின் கதாப்பாத்திரங்களாய் மாறும் போது தேவன் நம்மைப் பார்த்து 'நம் சோதனைகளுக்கு மத்தியிலும் தேவன் நம் நடுவே கடந்து வருவேன்' என்று கூறுகிறார்.



யோசுவா 3:5 ல் கூறப்பட்டிருக்கிறது, நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவில் அற்புதங்களைச் செய்வார். நம் சோதனைகளின் மத்தியில் தேவன் அவைகளைப் பார்த்துத் தூர நிற்கிறவரல்ல. நம் நடுவே நின்று நமக்கு உண்டான சோதனையில் தேவன் நமக்கு உதவி செய்ய வல்லவராய் இருக்கிறார்.



எப்போது தேவன் கடந்து வருவார்

நாம் நமது பிரச்சனைகளில் கைகட்டி நிற்கும் போது தேவன் நம்மை நோக்கி கடந்து வருவதில்லை. தேவனும் கைகட்டித்தான் நிற்பார். நாம் நம் கரங்களைக் குவித்து தேவனே எனக்காக இரக்கஞ் செய்யும்படி கடந்து வாரும் என்று அவரை வருந்தியழைக்கும்போது தேவன் இறங்கி வந்து உதவி செய்வார்.




சிந்தனை: உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவே அற்புதங்களைச் செய்வார்.


ஜெபம்: தேவனே என்னில் வந்து அற்புதங்களைச் செய்யும் .ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இப்படிச் செய்வதே பிரியம்

வேதபகுதி:ஆமோஸ் 4 : 4 - 5


கில்காலுக்கும் போய் துரோகத்தைப் பெருகப்பண்ணி பலிகளையும் தசமபாகங்களையும் செலுத்தி... வசனம் 4.



சிறு பிள்ளைகள் இனிப்புப் பண்டங்களையே அதிகமாக விரும்புகின்றனர். காரமான, புளிப்பான, துவர்ப்பான பொருட்களை வெறுத்துவிடுகின்றனர். சாக்லேட் என்றால் அவர்களுக்குக் கொள்ளைப் பிரியம். அதை உண்டு சிறுவயதிலேயே பற்களில் சொத்தை வந்து இளவயதிலேயே பற்களை இழந்து விடுகிறார்கள்.



இது போன்றே இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு விருப்பமான பாவச் செயல்கள் பலவற்றைச் செய்து கொண்டே வந்தார்கள். அது அவர்களை அழிவுக்கு நேராக வழி நடத்திவிடும் என்று தேவன் பல்வேறு தீர்க்கதரிசிகள் மூலமாக எச்சரித்தும் அவர்களுக்கு அதை விட்டுவிட மனதில்லை. ஆகவே தான் ஆண்டவர் சொல்லுகிறார் இப்படிச் செய்வதே இஸ்ரவேலருக்குப் பிரியமாயிருக்கிறது என்று அவர்கள் மனக்கடினத்தினிமித்தம் எச்சரிக்கிறார்.



வாலிபர்கள் பீடி, சிகரெட், மது, பான்பராக், போதைப் பொருட்கள் போன்ற பொருட்களை அந்த பொருட்களின் லேபிளில் " இந்தப் பொருள் உடல் நலத்திற்குக் கேடு " என்றுப் போட்டிருந்தாலும் அவர்கள் அதைப்பிரியமாய்ப் பயன்படுத்துகிறார்கள். இது அவர்களுக்கு அழிவு ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தாலும் அதைப் பிரியமாய்ப் பயன்படுத்துகிறார்கள். முடிவில் புற்று நோய் வந்து, நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் கெட்டுப் போனபின்பு வருந்துகிறார்கள். அதன் பின்பு ஐயோ போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணிணதே என்று புலம்பவேண்டியதாயிருக்கும்.




நமக்குப் பிரியமானப் பாவப்பழக்கங்கள் போன்ற தீயக் காரியங்களுக்கு யோசேப்பைப் போல விலகி ஒட இன்றைக்கே நாம் தீர்மானம் எடுப்போம். அப்பொழுது கர்த்தர் நம்மை அதிகமாய் ஆசிர்வதிப்பார். நமது எதிர்காலம் மிகவும் ஆசிர்வாதமாக இருக்கும்.




சிந்தனை: பாவம் பூரணமாகும் போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.


ஜெபம்: தேவனே இவ்வுலகத்தின் பாவத்திற்கு விலகி ஓட உம்முடைய தூயக் கிருபையைத் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பாசானின் மாடுகள்

வேதபகுதி:ஆமோஸ் 4:1 - 3


சமாரியாவின் மலையிலுள்ள பாசானின் ஆடுகளே, நீங்கள் இந்த வார்த்தையைக் கேளுங்கள். வசனம் 1



குஜராத், பீகார், ஒரிசா போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் காலை, மாலை வேளைகளில் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளுமாக அவர்கள் காய்ச்சிய சாராயத்தைக் குடித்துக் கொண்டிருப்பார்களாம். சாராயம் காய்ப்பதற்காக அவர்கள் ஒரு வித பூக்களைப் சேகரிக்கப்பதற்காக் குழந்தைகள் செல்வார்களாம். இதை அங்குள்ள மிஷனெரிகள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் அங்குள்ள ஆதிவாசி மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.



வேதாகமத்தைப் பார்க்கும் போது பழைய எற்பாட்டுக் காலத்தில் இஸ்ரவேலர்களும் இவ்விதமான பாவத்திற்கு அடிமை பட்டு இருந்ததைப் பார்க்க முடிகிறது. அந்நாட்களிலேயே பெண்களும் குடித்து வெறித்திருந்திருக்கிறார்கள். அங்குள்ள வசதி படைத்த பெண்களும் குடித்து வெறித்து ஏழைகளை ஒடுக்கி வந்தனர். ஆண்டவர் அவர்களுக்கு வரும் அழிவையும் நியாயத்தீர்ப்பையும் குறித்து எச்சரிக்கிறார். ஆனால் அவர்களோ மனந்திரும்பாமல் துணிந்து நடந்து வந்தார்கள் . ஆகவே நியாயத்தீர்ப்பு நாளில் ஆண்டவரின் வார்த்தைகளின்படி ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு இல்பொருளாகிவிட்டனர். ஆண்டவர் அவ்வப்போது நம்மையும் எச்சரிக்கிறார். நாம் அல்லத்தட்டாமல் உடனே மனந்திரும்பி ஆண்டவரை நமது இரட்சகராக ஏற்றுக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் சாலமோன் ராஜா சொல்லியபடி சடுதியிலே நாசமடைவதற்கு ஏதுவாக வேண்டியதிருக்கும்.



இன்றைய நாகரிக காலத்தில் கணினித் துறையில் வேலை பார்க்கும் பெண்களும் கூட மது அருந்துகிறார்கள் என்று செய்தித்தாள்களில் பார்க்கிறோம். இந்தக் கலாச்சாரம் மிகவேகாமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. நாம் எப்படிப் பட்ட நிலைமையில் இருக்கிறோம். சிலரிடம் நீங்கள் ஏன் மது அருந்துகிறீர்கள் என்று கேட்டால், விருந்திற்கு வந்திருந்த அனைவரும் மது அருந்தினார்கள் அவர்களில் நான் மட்டும் தனியாக இருந்தால் நன்றாக இருக்காது அதனால் மது அருந்தொனேன் என்று சோல்லுவார்கள். மது பழக்கத்தினால் நாசமாகிப் போன் அநேகக் குடும்பங்களை நான் கண் கூடாகப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கே நாம் இப்படிப் பட்ட பாவத்திலிருந்து விடுபடுவோம் இல்லையென்றால் இன்னும் நாம் அழிவின் பாதையில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.



சிந்தனை: திராட்சரசம் பரியாசஞ்செய்யும்.மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. நீதிமொழிகள் 20:1

ஜெபம்: கர்த்தாவே உலகத்தாரோடு ஒத்த வேசம் தரியாமல், ஞானமுள்ளவனாய் நடக்க கிருபை புரியும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

தப்புவிப்பது எப்படி?

வேதபகுதி:ஆமோஸ் 3 :12 - 15


இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் வசனம். 12



கொலை குற்றம் புரிந்து விட்ட ஜாண் விசாரிக்கப்பட்டு மரணதண்டனை தீர்ப்பை நீதிமன்றத்தில் பெற்றான். பெற்றோரை இழந்த அவனை அவன் அண்ணன் பராமரித்து வந்தான். இறுதியாக ஒரு முறை தம்பியைப் பார்க்க அண்ணன் சென்றான், தம்பி அழுதான். காப்பாற்ற வேண்டினான். அண்ணன் செய்வதறியாது திகைத்தான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தான். தனது ஆடைகளைக் களைந்து தனது தம்பியிடம் கொடுத்து தம்பியின் சிறைச்சாலை ஆடைகளை தான் தரித்துக் கொண்டு தூக்கு மரம் சென்று மரித்தான்.



ஆம் நாம் செய்த தவறுகளுக்கு எற்ற தண்டனை மரணமே. யார் தப்புவிப்பது. நம்மால் நம்மை தப்புவித்துக் கொள்ள முடியாதல்லவா? ஆகவே தான் நமதாண்டவர் நமக்காக ஜீவனைக் கொடுத்து நம்மை மீட்டுக் கொண்டார்.



அவராலேயல்லாமல் வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும் வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை. அப்போஸ்தலர் 4:12. ஆகவே அவரையே நாம் நமது இரட்சகராகக் கொள்ளாவிட்டால் நாம் நமது அழிவைத் தர எதைத்தான் அறுக்க முடியும். நாம் மனந்திரும்பி இன்றே இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுவோமா?



சிந்தனை: இன்றைக்கே மனந்திரும்பு. இனிக் காலம் செல்லாது. கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது.

ஜெபம்: தேவனே உம்முடைய இரட்சிப்பின் வழிகளிலே அனுதினமும் நடக்க எனக்கு உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

இஸ்ரவேலுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 2 : 6 - 16


இஸ்ரவேல் நீதிமானைப் பணத்திற்கும் எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப் போட்டார்களே. வசனம் .6



இஸ்ரவேலர் கானானியருடைய பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டதோடு, பாகால் வணக்கத்திலும் பழகிக் கொண்டார்கள். ஒரே தேவ வணக்கத்தை விட்டுவிட்டுப் பல தேவர்களையும் சேவித்தார்கள்.



இவ்விதமாய் எகிப்திலிருந்து விடுவித்து கானானைச் சுதந்திரமாய்க் கொடுத்த தேவனை மறந்தார்கள். மோவாபியரும் அம்மோனியரும் இஸ்ரவேலரைக் கொள்ளையடித்தார்கள். பெலிஸ்தியர் இஸ்ரவேலருக்கு இடுக்கன் செய்தார்கள்.



ஒருமுறை சர் ஐசக் நியூட்டன் என்ற புகழ் வாய்ந்த விஞ்ஞானியை ஒருவர் பார்த்து"ஐயா நீங்கள் கண்டுபிடித்த நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகளிலே மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எது? என்று வினவ என் பாவங்களை மன்னிக்க இயேசுவின் இரத்தமே அல்லாமல் வேறொன்றும் இல்லை என்ற கண்டுபிடிப்புதான்" என்று சொன்னாராம்.



ஆமோஸ் கால மக்கள் தேவன் காட்டும் ஜீவ வழியை விரும்பவில்லை. கர்த்தருடைய வேதத்தை வெறுத்தார்கள். தீர்க்கதரிசிகளை நோக்கி நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டாம் என்று கற்பித்தார்கள். இவ்விதமாய் அவர்கள் அழிவின் பாதையைத் தெரிந்து கொண்டார்கள்.



நாம் எப்படிப்பட்டப் பாதையைத் தெரிந்துக் கொண்டிருக்கிறோம்? அழிவின் பாதையா? ஜீவனுக்கேதுவான பாதையா?



சிந்தனை: நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. நீதிமொழிகள் 12:28


ஜெபம்: கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மோவாபின் பாவம்

வேதபகுதி:ஆமோஸ் 2:1 - 3


மோவாப் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப் போட்டானே. வசனம் 1



இஸ்ரவேலர் பிரயாணமாய் இந்தத் தேசத்துக்கு வந்தபோது அவர்களோடு யுத்தம் செய்யவில்லை (நியா 11:15). பின்பு நியாயாதிபதிகளின் நாட்களில் மோவாபிய இராஜாவாகிய எக்லோன் இஸ்ரவேலரைப் பதினெட்டு வருட காலம் ஒடுக்கினான்.



இப்படி அவர்கள் செய்த அநேக பாவங்களினிமித்தம் தேவன் அவர்களை அழித்துப் போடுவேன் என்று தேவன் ஆமோஸ் தீர்க்கதரிசியின் மூலமாக எச்சரிக்கிறார்.



நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கடமைக் கிறிஸ்தவராகவா அல்லது உண்மைக் கிறிஸ்தவராகவா? நம் வாழ்க்கையைச் சீர் தூக்கிப் பார்ப்போம். கிருபையின் காலத்தில் இருக்கின்ற நாம் இப்பொழுதே மனம் திரும்பி இயேசுவி அடிச்சுவடுகளை பின்பற்றி நடந்து தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டு நரக ஆக்கினைக்குத் தப்புவோம். கிறிஸ்துவின் வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது.



சிந்தனை: இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள், கேட்டுக்குப் போகிற வாசல் விருவும், வழி விசாலமுமாயிருக்கிறது


ஜெபம்: தேவனே ஜீவனுக்கேதுவான வழியில் நடப்பதற்கு உமது நித்தியக் கிருபையைத் தாரும். ஆமேன்.




தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

அம்மோனியாவின் பாவம்

வேதபகுதி:ஆமோஸ் 1:13 - 15


அம்மோன் புத்திரர் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத்தின் கர்ப்பஸ்திரீகளை கீறிப்போட்டார்களே. வசனம் .13



அம்மோன் புத்திரர் செய்த பாவங்களினிமித்தம் அவர்கள் மேல் வரும் ஆக்கினையத் திருப்பமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.இந்த அம்மோன் புத்திரர் லோத்தின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்.



அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்தபோது, இஸ்ரவேலில் ராஜாவாயிருந்த தாவீது அவனுடைய குமாரனுக்கு ஆறுதல் கூறுவதற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பிய போது, அம்மோன் புத்திரர், ஸ்தானாதிபதிகளை அவமானப்படுத்தி அனுப்பினார்கள். (1 நாளாகமம் 19). இப்படி மற்றவர்களைப் பழித்தல், அவமானப்படுத்துதல் போன்ற தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களில் ஈடுபட்டார்கள். இவர்களைத் தேவன் பல்வேறு தீர்க்கத்தரிசிகளின் மூலமாக எச்சரிக்கிறார். ஆனாலும் அவர்கள் தங்கள் பாவங்களை விட்டு மனம் திரும்பவேயில்லை. ஆகவே தேவன் அவர்களை அழிக்க நினைக்கிறார்.



நாமும் தேவனுடைய ஊழியக்காரர்களின் மூலமாக கொடுக்கும் எச்சரிப்புகளுக்கு அசட்டையாக இருப்போமானால் நம்முடைய வாழ்க்கையும் கேள்விக்குறியதாக இருக்கும். தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்து தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.



சிந்தனை: தேவன் கொடுக்கும் எச்சரிக்கைக்குக் கீழ்ப்படிந்து நட.


ஜெபம்: தேவனே உமது வசனத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கிருபை தாரும்.ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஏதோமுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 1:11 - 12


எதோம் தன் சகோதரனை பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. வசனம் 11.



ஏதோமின் பூர்விகத் தலைநகர் போஸ்றா, ஏதோமியர் இஸ்ரவேலரைத் தங்கள் தேசத்தின் வழியாய் போக இடங்கோடுக்கவில்லை. மோசே காதேசிலிருந்து ஏதோமின் இராஜாவினிடத்திர்கு ஸ்தானாபதிகளை அனுப்பி எகிப்திலிருந்தே தேவன் எங்களை விடுவித்தார். எனவே உங்கள் தேசத்தின் வழியாய் கடந்து செல்ல பல நிபந்தனைகளோடே அனுமதி கேட்டும் கொடுக்கவில்லை. இதனால் இஸ்ரவேல் அவனை விட்டு விலகிப்போனார்கள்.



சவுல் இராஜாவாயிருந்த நாட்களில் இவர்களோடு யுத்தம் செய்து தோற்கடித்தான் (1 சாமுவேல் 14:47). பிற்பாடு தாவீதும் அப்படியே செய்தான் (11 சாமுவேல் 8:14). நேபிகாத்நேச்சார் எருசலேமை முற்றுகையிட்டபோது இவர்கள் அவனோடு சேர்ந்திருந்தார்கள்.



சார்லஸ் பின்னி தன் ஊழியத்தில் சிறிது வல்லமை குறைந்து விட்டாலும் உடனே உபவாசித்து, ஜெபித்து, கண்ணீரோடு தன் குறைவுகளி அறிக்கை செய்து புதுபெலனைப் பெற்றுக் கொள்ளுவார்.



தேமான் என்பது ஏதோம் தேசத்திலுள்ள ஒரு கோத்திரமும் அதைச் சார்ந்த நாடாகும். இந்தக் கோத்திரத்தார் அறிவில் சிறந்தவர்கள் என்று மற்ற ஜனங்கள் யாவரும் நினைத்தார்கள். யோபுவுக்குப் புத்தி சொன்னவர்களில் ஒருவன் இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.



சிந்தனை: முதலாவது உன் ஜீவியத்தில் காணும் குறைகளைக் கண்டு பிடிக்க எத்தனி.


ஜெபம்: ஆண்டவரே, என்னிலுள்ள பிடிவாதத்தை அகற்றும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பெலிஸ்தியாவுக்குத் தண்டனை

வேதபகுதி:ஆமோஸ் 1:6 - 8


பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன். வசனம் 8



பெலிஸ்தியர் குடியிருந்த தேசமானதால் பெலிஸ்தியா எனப்பட்டது. பிற்காலங்களில் கானானியரும் மோவாபியரும் அங்கேயிருந்தார்கள். எபிரேயர் அவர்களைத் துரத்திவிட்டு அங்கே குடியேறினார்கள்.பெலிஸ்தர்கள் செய்த அக்கிரமங்களினிமித்தம் தேவன் அவர்களை அழிப்பேன் என்று ஆமோஸ் தீர்க்கதரிசியிடம் தேவன் உறைக்கிறார்.



இஸ்ரவேலரை தேவன் மீட்டுக் கொண்டதினிமித்தம்( யாத்திராகமம்15:14) பெலிஸ்தியரைத் திகில் பிடிக்கும்(ஏசாயா 14:29). முழு பெலிஸ்தியாவே உன்னை அடித்தகோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே. பாம்பின் வேரிலிருந்து கட்டு விரியன் தோன்றும், அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்க்கும்.



சிலந்திப் பூச்சி வலையைப் போல சாத்தான் அநேக வலைகளை விரித்து வைத்திருக்கிறான். சிலந்திப் பூச்சியின் வலையில் சிக்கும் பூச்சிகளை அந்த சிலந்தி தன் கால்களால் அன்போடு இழுக்கிறது போல இரத்தத்தை உறிஞ்சி தொங்க விட்டுவிட்டு சென்று விடுகிறது.



சிந்தனை: பாவச் செயல்களை உன் வாழ்வில் கூடுகட்ட விடாதே.


ஜெபம்: கர்த்தாவே, பாவத்திற்கு எதிர்த்துப் போராடக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

பாவமும் தண்டனையும்

வேதபகுதி:ஆமோஸ் 1:3 - 5


தமஸ்குவினுடைய... ஆக்கினையத் திருப்பமாட்டேன். வசனம் 3



நூறு வருடங்களாய் தமஸ்குவுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையில் யுத்தம் நடந்தது. தமஸ்குவில் இருந்த இராஜாக்களில் பெனாதாத் பேர்பெற்றவன். ஆகாப் இராஜாவின் நாட்களில் அவன் இஸ்ரவேலரை நெருக்கினான்.



தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம், திகில் அதைப் பிடித்தது. பிரசவ ஸ்திரியைப் போல இடுக்கமும், வேதனைகளும் அதைப் பிடித்தது. சந்தோஷமான அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பிவிடப்படாமற்போயிற்றே. ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து யுத்த மனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமானார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன், அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார் (எரேமியா 47:24- 27).



கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம் என்று சொல்லி, கர்த்தரிடம் திரும்பும்படி ஓசியா கூறுகிறார். ஆசகேல் தன் முன்னிருந்தவனைக் கொன்று தான் பட்டம் சூட்டினவன். எனவே அவன் வீட்டில் தீக்கொளுத்துவேன் என்கிறார் தேவன் (ஓசியா 6:8).



அப்போஸ்தலனாகிய பவுலின் குணப்படுதல் தமஸ்குவுக்குச் சமீபமாய்ச் சமீபித்தது. பின்பு அவன் தமஸ்குவுக்குக் கொண்டு போகப்பட்டு, பார்வை அடைந்து, ஞானஸ்நானம் பெற்று ஆலயங்களில் பிரசங்கிக்க உதவியது.



சிந்தனை: தேவனின் கடிந்து கொள்ளுதலை அசட்டை செய்யாதே.


ஜெபம்: தேவனே உம்முடைய கடிந்து கொள்ளுதலை எற்று நடக்க உதவி புரியும்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நான் யார்?

வேதபகுதி:ஆமோஸ் 1:1 - 2


தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ். வசனம் 1



ஆமோஸ், யூதேயா நாட்டைச் சேர்ந்த தெக்கோவா ஊரிலுள்ளவன். குடும்பம் எளிமையானது. அவனுடைய ஆஸ்தி ஒரு சிறு மந்தையும் சில காட்டத்தி மரங்களுமே. தன் ஆடுகளை மலையோரங்களில் மேய்ப்பதும், காட்டத்திப் பழங்களைப் பொறுக்கி விற்பதுமே அவனது தொழில்.



ஆமோஸ் என்னும் பதத்துக்குப் பாரம் என்பது பொருள். அதிக பாரத்தோடு தன் ஊழியத்தை நிறைவேற்றிய ஒரு தீர்க்கதரிசி. தேவசத்தத்தைத் தெளிவாய்க் கேட்டதினாலேயே அவ்விதமான பாரம் ஏற்பட்டது. தேவனுடைய அழைப்பைப் பெற்றபோது, தனக்குள்ள யாவற்றையும் விட்டு ஆண்டவருடைய சேவையைச் செய்ய தன்னை ஆயத்தப்படுத்தினான். குருவியைப் பிடிப்பது போல ஆண்டவர் அவனைத் தன் கையில் பிடித்தார் (ஆமோஸ் 3:5). தன் உள்ளத்திலிருந்த செய்திகளை அவனுக்குத் தேவன் தெரியப்படுத்தினார் (3:7). அவனும் தேவனும் ஒருமித்து நடந்தார்கள் (3:3). சாதாரண தொழில், உபதேசமுறை, சத்துருக்களின் வீண்பக்தி, கடமையைக் குறித்த பாரம் இவைகளைப் பார்க்கும் போது பல விசயங்களில் இவர் இயேசுவைப் போன்றவர் எனத் தெரிகிறது. தேவ வசனம் அவனை உயிர்ப்பித்து ஏவி எழுப்பியதால் தேவனுடைய வார்த்தைகள் சிங்கம் கர்ஜிப்பது போல் இருந்தது (3:4).



D.L.மூடி என்ற பக்தனும் துவக்கத்தில் ஞாயிறு பாடசாலை ஊழியத்தைச் செய்தவர் தான். எதிர் காலத்தில் ஐரோப்பா கண்டத்தை ஒரு கையிலும், அமெரிக்காவை ஒரு கையிலும் ஜெபத்தில் எந்தி நின்று தேவனை மகிமைப்படுத்தினவராக உயர்ந்தார்.



சிந்தனை: அழைப்பை உதாசினம் செய்யாதே.


ஜெபம்: ஆண்டவரே, தீர்க்கர்களை எங்களுக்குள்ளே எழுப்பியருளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

வற்றாக் கிருபை நதியே

வேதபகுதி:மீகா 7:20


தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவாராக.



ஆண்டவரின் ஆராய்ந்து முடியாத, அளவிடமுடியாத ஒரு குணம் அவருடைய கிருபை தான். கிருபை மனிதனால் காட்டமுடியாது. கிருபை என்பது அருகதையில்லாத, வக்கில்லாத, இழிவான நிலையிலிருக்கும் ஒருவருக்கு கிடைக்கும் ஆண்டவரின் மாறாத கொடை. எபேசியர் 2:8ல் கிருபையினால் இரட்சிப்பு என்று சொல்லப்படுகிறது. பவுல் சொல்லுகிறார், நான் இருக்கிறது தேவனுடைய சுத்த கிருபை என்று சொல்லுகிறார். மேலும் தம்முடைய கிருபயினால் என்னை அழைத்த தேவன் என்றும் கூறுகிறார். ஊழியமே தேவனால் விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட கிருபை என்று சொல்லுகிறார் (எபேசியர் 3:2,7,8,11). கிருபையின் காலம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த உலக வாழ்வில் நானும், எனக்கென்று இருக்கின்ற எல்லாமே ஆண்டவரால் மட்டும் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்.



இவ்வசனத்தில் ஆண்டவர் சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுகிறார். ஏன் தெரியுமா? யாக்கோபுக்குத் தேவை உண்மை, சத்தியம். ஆபிரகாமுக்குத் தேவை கிருபை. அன்பு சகோதரனே, சகோதரியே ஒருவேளை நீங்கள் ஏமாற்றுபவராக, பொய் சொல்லுபவராக இருந்தால் ஆண்டவர் தமது சத்தியத்தைத் தருகிறார் அல்லது விசுவாசத்தோடு வாழ்பவராக இருந்தால் தமது கிருபையைத் தர வல்லவராயிருக்கிறார்.



சிந்தனை: துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும். சங்கீதம் 32:10


ஜெபம்: வற்றாத கிருபை நதியே, உமது கிருபையை விசுவாசத்தால் பெற்றுக் கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

சமுத்திரத்தின் ஆழம்

வேதபகுதி:மீகா 7:19

அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.





கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, மனந்திரும்பி ஆண்டவருக்கு உங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து விட்டீர்களா? 1 யோவான் 1 :9ன் படி நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு தேவன் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். பாவத்தை மன்னிக்கிறார், பாவத்தை நீக்குகிறார், நம்மைப் பரிசுத்தமாக்குகிறார். ஏசாயா 43:25, ஏசாயா 38:17ன் படி பாவங்களை குலைத்துப் போட்டு மறந்து விடுகிறவர், மற்றும் முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுபவர்.



ஆனால் நாமோ சில நேரங்களில் சிறு பிராயத்தில் அல்லது வாலிபப் பிராயத்தில் அல்லது மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்த பழைய பாவங்களை நினைத்து குற்ற மனசாட்சி அடைந்து சமாதானத்தை இழந்து போகிற சூழ்நிலைகளுக்குச் சாத்தானால் தள்ளப்படுகிறோம். நமது பாவங்களைத் தேவன் பார்க்கக் கூடாத, போகமுடியாத தூரமான இடத்தில் சமுத்திர ஆழத்தில் போட்டபின் நாம் ஏன் மீண்டும் மீண்டும் கிளறிப் பார்க்கிறோம்?. நம்முடைய தேவன் மன்னித்தவுடனே மறந்து விடுகிறார். நாம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோம்.



சிந்தனை: குற்றங்களையெல்லாம் மன்னிக்கிறார், நோய்களை குணமாக்கி நடத்துகிறார். அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒரு நாளும் மறவாதே. ஒருபோதும் மறவாதே.


ஜெபம்: பாவத்தைப் பாராத சுத்தக்கண்ணரே, என் பாவங்களை அகற்றி, பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மன்னிப்பதில் வல்லவர்

வேதபகுதி:மீகா 7:18

தமது சுதந்திரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விருப்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்.





பாவம் செய்கிற பிறவிகுணம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஆகவேதான் தாவீது சொல்லுகிறார் நான் துர்குண்த்தில் உருவானேன். என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள். சங்கீதம் 51:5



பாவம் செய்கிற மனுக்குலம், குறுகுறுக்கும் குற்ற மனசாட்சியிலிருந்து விடுபட பரிகாரம் தேடுகிறது. புண்ணியம், பலி, தானதர்மம் மூலமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண்டவர் ஒருவரே பாவங்களை மன்னிக்கிறவராக இருக்கிறார். மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர் நமதாண்டவர். பாவங்களை மன்னிக்கிறதற்கு மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்று இயேசு சொன்னார். பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவர்களுக்கு இரக்கம் செய்கிறவராக இருக்கிறார். மனிதன் சகவிசுவாசியை மன்னித்து விட்டேன் என்பான், மறக்கமாட்டான். எப்படியென்றால் நாம் ஜெராக்ஸ் காப்பியைக் கிழித்துவிட்டு ஒரிஜினல் காப்பியை வைத்துக் கொள்ளுகிறவர்களாயிருக்கிறோம். மன்னிப்பதென்பது நம்மைப் பொறுத்தவரை பெயரளவில் மட்டுமேயுள்ளது. ஆண்டவர் மன்னிக்கிறவர் மாத்திரம் அல்ல், மறந்துவிடுகிறவருங்கூட. சமுத்திரத்தின் ஆழத்தில் எரிந்துவிடுகிறார். கடவுள் போல மன்னிக்கிற குணம் பெற்ற மனிதன் யாருமில்லை. சகோதர சகோதரியே உனக்கு மன்னிப்பு கிடைத்துள்ளதா? உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் பஞ்சைப் போல வெண்மையாகும்.



சிந்தனை: மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:12


ஜெபம்: மன்னிப்பின் மைந்தனே, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை எனக்குத் தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

சத்துரு தலைகுனிவான்

வேதபகுதி:மீகா 7:10

உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவன் அதைப் பார்க்கும் போது வெட்கம் அவனை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். வசனம் 10





நம்முடைய வாழ்க்கையில் இருவிதமான சத்துருக்கள் இருக்கிறார்கள். ஒன்று சாத்தான் அடுத்து மனிதர்கள். வாழ்க்கை என்பது ஒரு போராட்டமே. சாத்தான் எல்லா கடவுளுடைய பிள்ளைகளுக்கும் எதிர். மனிதர்கள் எல்லாரும் நமக்கு எதிரிகள் கிடையாது. சத்துரு எதிர்பாராத நேரத்தில் வெள்ளம் போல திடீரென வரும் பொழுது ஆவியானவர் நமக்கு வெற்றி தருவார். கெர்ச்சிக்கிற சிங்கள் போல நம்மை விழுங்க சுற்றித் திரியும் சாத்தான் வெட்கப்பட்டுப் போவான். நமக்கு கண்ணி வலை விரிக்கின்ற எதிரிகள் வெட்கப்பட்டுப் போவார்கள்.
"இயேசுவின் இரத்தத்தைச் சொல்லி
இயேசுவுக்காய் சாட்சி சொல்ல
இயெசுவின் நாமத்தைச் சொல்ல
அவன் தொற்றுப் போனவன் தானே, ஓடிப்போவான்"

என்று பக்தன் பாடுகிறார். சத்துருவைச் சிலுவையில் தோற்கடித்த ஆண்டவர் பிசாசின் தலையை நசுக்கி மிதித்து விட்டார். ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நம்மைச் சத்துரு தொட முடியாது. அல்லேலுயா.





சிந்தனை: சத்துரு தலை கவிழ்ந்தோட

நித்தமும் கிரியை செய்திடும்

தமது முகப் பிரகாசம் தினமும் என்னில் வீசிடுதே


ஜெபம்: வெற்றி வேந்தரே, உலகத்தில் வரும் உபத்திரவங்களிலிருந்து வெற்றியை எனக்குத் தாரும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யார் எதிராக வருவார்கள்?

வேதபகுதி:மீகா 7:6- 9

மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே. வசனம். 6





ஒருவரின் பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். இந்த வசனத்தை இயேசு மேற்கோள் காட்டுகிறார். நாம் எந்த ஒரு நல்லகாரியத்திற்கும், ஊழியத்திற்கும் போக ஒரு நடை முன் வைப்போமானால் முதலில் விமர்சிப்பவர் நம் குடும்பத்தார்தான் குறை சொல்லுவார்கள். ரொம்ப வேகமாக போகிறான் எங்கே போய் முட்டுவானோ தெரியவில்லை என்பார்கள். தடை போடுவார்கள், படிப்படியாகப் போகலாம் ஒரேயடியாக வேகம் வேண்டாம் என்பார்கள், தடை போடுவார்கள். இங்கே தேவை இருக்கும் போது வேறு இடத்துக்கு அனுப்பவும் வேண்டாம், போகவும் வேண்டாம் என்பார்கள். இயேசுவையே அவருடைய குடும்பத்தில் வெறுத்தார்கள். அவரை பிடித்து ஊழியத்தை தடுத்து நிறுத்த எண்ணினார்கள், பஸ்கா பண்டிகையின் போது விளம்பரப்படுத்திக் கொள் என்றார்கள். ஆனால் இயேசுவோ அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை. நமக்கு எதிராக வருகிறவர்களுக்கு இடம் கொடாமலே நாம் முன்னேறிச் செல்வோம்.



சாது சுந்தர் சிங்கின் வாழ்க்கையிலே எத்தனை முறை தம் சொந்த ஜனங்களாலும், குடும்பத்தாராலும், சமயத் தலைவர்களாலும் பகைக்கப்பட்டார். ஆனால் இயெசுவைச் சொல்வதை மாத்திரம் நிறுத்தவில்லை. கடைசிவரை இயேசுவைப் பறைசாற்றினார். நாம் எப்படி இருக்கிறோம்.




சிந்தனை: யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார். தந்தையும் தாயும் கைவிட்டாலும் கைவிடாத நேசரவர்.


ஜெபம்: கைவிடாத நேசரே, இவ்வுலக உறவுகளினாலே சோர்ந்து போகின்ற வேளையிலே என்னை உற்சாகப்படுத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

நம்பிக்கைத் துரோகம்

வேதபகுதி:மீகா 7:5

சினேகிதனை விசுவாசிக்க வேண்டாம், வழிகாட்டியை நம்ப வேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. வசனம் .5





மாப்பிள்ளை மும்பையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். மாப்பிளை வீட்டார் பெண் பார்த்துக் கொண்டிருப்பதாக செய்தி வந்தது. தென் தமிழ்நாட்டில் குடியிருந்த ஒரே மகளையுடையவர், மகளுக்குக் குடும்ப வாழ்க்கை சொகுசாக அமையவேண்டும் என்று விரும்பி தன் மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்தார். மாதத்தில் ஒரு நாள் கணவர் இரவு வீடு வராமலிருந்தார். கேட்டாள், மறைத்துவிட்டார். ஊரை மூட உளைமுடி இல்லை என்ற வழக்குச் சொல்லின் படி மனைவிக்கு கணவனின் கள்ளத் தொடர்பு தெரியவந்தது. நம்பிக்கைத் துரோகம் கணவன் மனைவிக்கிடையில். ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகள், நண்பர்கள் கூட ஏமாற்றி விடுகிறார்கள். பக்கத்தில் இருப்பவர் ஏமாற்றுகிறார். சங்கீதம் 118:8ன் படி மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் என்று சொல்லப்படுகிறது. கவனமாயிருப்போம், மற்றவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாமலிருப்போம்.





சிந்தனை: சிம்சோனுக்கு ஒரு தெலிலாள்
இஸ்ரவேலுக்கு ஒரு ஆகான்
இயேசுவுக்கு ஒரு யூதாஸ்
மற்றவர்களுக்கு நாம் எப்படி?


ஜெபம்: நம்பிக்கையின் நங்கூரமே, உம்மை மறுதலிக்காமல் உண்மையாய் உம்மை ஜீவிக்க உம்முடைய தூய ஆவியால் என்னைப் பெலப்படுத்தும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

போலியான வாழ்க்கை

வேதபகுதி:மீகா 7:4

அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டணையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. வசனம் .4





இயேசுவின் காலத்தில் பரிசேயர், சதுசேயர், யூதர்கள் தங்கள் தான் நீதிமான்கள் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து மாயக்காரரே உங்களுக்கு ஐயோ என்று சாடினார். இன்று அநேகர் வெளிப்புறமாக சமுதாயம், சபைக்கு முன் உத்தமர் போல் நடிக்கிறார்கள். ஓர் ஊழியர் ஒரு சபையில் ஊழியம் செய்து வந்தார். அவர் ஊழியஞ்செய்கிற சபையில் சபையார் எல்லாரும் குறை சொன்னார்கள். என்னவென்று பார்த்தால் அவர் அவருடைய மனைவியிடம் பேசிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறினார்கள். அருமையானவர்களே, நாம் இன்றைக்கு நல்லவன் போல வேஷம் போடுகிறோம். அதனால் தான் வேதம் நல்லவன் முட்செடிபோலவும், செம்மையானவன் நெரிஞ்சலைப் போலவும் இருக்கிறான் என்று தீர்க்கன் சொல்லுகிறார்.



Duplicate பெருகி வரும் காலத்தில் Original ஆக வாழ அழைக்கப்படுகிறோம். ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவனாக அல்ல எல்லா நாலும் கிறிஸ்தவனாக வாழ அழைக்கப்படுகிறோம்.





சிந்தனை: ஞாயிற்றுக்கிழமையிலே வேடத்தைக் கலைப்பேன்.
கோயிலிலே காபிரியேல் நானேதான்
பாட்டுப்பாடி பரமனோடு ஒன்றிய பின்னே
கூட்டை விட்டு சுய உருவில் வெளியிலே வருவேன்.


ஜெபம்: வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப்போல் பார்வைக்குப் பகட்டாய் வாழாதபடி உள்சுத்தம் தாரும் தேவனே. ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

எதில் கைதேர்ந்தவர்கள்

வேதபகுதி:மீகா 7:3

பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும். வசனம் .3





தீமை செய்வதில் இவ்வுலகத்தார் கைதேர்ந்தவர்கள். சுரண்டல் நிறைந்த உலகம் அரசியல், அதிகாரம், மதம், இனம், ஜாதி, வியாபாரம் போன்ற போர்வைகளை போட்டு மூடிக்கொண்டு யாருக்கும் தெரியாது என் நினைத்துக் கொண்டு சுரண்டி வாழும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எள்ளளவும் கூட சுரண்டாமல் உலகத்தில் உண்மையாக வாழமுடியாது என்று சவால் விடும் மக்களுக்கிடையில் கிறிஸ்தவராகிய நம்முடைய பதில் என்னவாக இருக்கும்.



ஒரு வேளை பணப்ப்ரிமாறாம் கணிணி மூலமாக நாணயமாக நடைபெறும் என்று எதிர்பார்த்தவர்கள் சைபர் க்ரைம் மிகுதியாகி தத்தளிக்கிறார்கள். எங்கு என்ன வேலை ஆக வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்காமல் ஒன்றும் நடக்காது. என்ன செய்வது? அஹா! லஞ்ச ஒழிப்பிற்கு சட்டங்கள் தான் எத்தனை. பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒரு சமுதாயம். கண்களை மூடி உலகத்துக்கு ஒத்துப் போகனுமா அல்லது எதிர் நீச்சல் போடமுடியுமா? என்ன தீர்மானிக்கப் போகிறீர்கள். முதலாவது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள்.





சிந்தனை: தீமை செய்ய நாடுதென்றன் திருக்குநெஞ்சமே
மருள் தீர்க்கும் தஞ்சமே
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே.


ஜெபம்: தூய ஆவியானவரே, எங்கள் பொல்லாத செயகளை மன்னித்து , இந்த மாயமான உலகத்தில் பரிசுத்தமாய் ஜீவிக்க அருள் புரியும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

ஆசிர்வாதக் குறைவு

வேதபகுதி:மீகா 6:13 - 16

நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய். வசனம். 14





சாப்பாட்டால் அநேகருக்குப் பிரச்சனை உண்டு. சிலருக்கு இனிப்பு சாப்பிடக்கூடாது, காரணம் சர்க்கரை வியாதி. சிலருக்கு பானை வயிறு என்பார்கள், கொஞ்சம் சாப்பிட்டாலும் எப்பொழுதும் வயிறு பெரிதாகவே இருக்கும். சிலரை நாய் வயிறு என்பார்கள், நாய் சாப்பிட்டுத் திருப்தியானாலும் இன்னும் ஆகாரம் இருக்குமானால் எதாவது ஒரு நாய் வருகிறதென்றால் அதைத் தின்ன விடாமல் இது வேகமாக அதைத் தின்ன ஆரம்பிக்கும், ஆனால் வயிறு பெரிதாகத் தெரியாது.



ஆனால் கடவுளின் ஆசிர்வாதம் மட்டுமே நம்மை திருப்தியடையச் செய்கிறது. உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம் (சங்கீதம் 65:4) என்று தாவீது சொல்லுகிறார். அப்படியானால் தேவ ஆலயம் அது பரிசுத்தமானது, அது ஆண்டவரின் வீடு, அங்கே நமக்கு நன்மையும் திருப்தியும் உண்டாகிறது. நாம் ஆலயத்திற்கு ஒழுங்காக செல்கிறோமா? ஆலயத்தை எதற்காகப் பயன்படுத்துகிறோம்? திருமணம் போன்ற காரியங்களுக்கா? இல்லை கல்வி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் படிப்பதற்கான இடம் கிடைப்பதற்கா? இல்லை கமிட்டிகளில் பதவி வகிப்பதற்கா? இல்லை ஊழியக்காரர்களைப் பற்றிக் குறை கூறுவதற்கா? இல்லை ஆலயக் காரியங்களில் ஈடுபடுபவர்களை பற்றிக் கேலி பேசுகிறவர்களாக இருக்கிறோமா?. இப்படிப் பட்டக் காரியங்கள் நமக்கு ஆசிர்வாதக் குறைவைத் தான் கொண்டு வரும்.ஆனால் பரிசுத்த அலங்காரத்தோடே கர்த்தரைத் தொழுது கொண்டால் நமக்கு ஆசிர்வாதமே.



ஆலயத்திற்கு தசமபாகம் கொடுக்கும் போது இடம் கொள்ளாமல் போகும் மட்டும் ஆசிர்வாதத்தைத் தருவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார் (மல்கியா 3:10). உற்சாகமாய்க் கொடுத்தால் தேவன் நம் மேல் பிரியமாய் இருப்பாரே. ஆகவே ஆலயத்திற்குக் கொடுப்போம். ஆண்டவரின் ஆசிர்வாதம் பெறுவோம்.




சிந்தனை: ஆலயம் தொழுவது சாலமும் நன்று.


ஜெபம்: உம்முடைய ஆலயத்தின் நன்மையால் என்னை திருப்தியாக்கி ஆசிர்வதியும் ஆண்டவரே. ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

யார் சுத்தமுள்ளவன்

வேதபகுதி:மீகா 6:9 - 12

கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? வசனம். 11





யோசுவா ஜனங்களை நோக்கி, உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதம் செய்வார் என்றான் (யோசுவா 3:5). அவ்விதம் அவர்கள் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு யோர்தானைக் கடக்க முயன்றார்கள். அப்பொழுது அது இரண்டாகப் பிரிந்து அவர்களுக்கு வழிவிட்டது. நாமும் ஆண்டவருக்கு முன்பாகப் பரிசுத்தமாக வாழ்ந்தால் அற்புதம் காணமுடியும்.



"புறத்தூய்மை நீரால் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப்படும்" எனத் திருவள்ளுவர் கூறுகிறார்.



பரிசுத்தம் என்பது முழுவதும் சுத்தம் அதாவது புறத்தூய்மை மற்றும் அகத்தூய்மை. புறத்தூய்மை குளித்தல், கழுவுதல் போன்றவற்றால் அமைகிறது. ஆனால் அகத்தூய்மை, மனதை சுத்தப்படுத்துவது. இயேசுவின் இரத்தம் நம்மை சகல பாவத்திலிருந்தும் சுத்திகரிக்கிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்தான் தேவனைத் தரிசிக்கமுடியும். தேவ வல்லமையையும் அற்புதங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். ஆகவேதான் தாவீது தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும் என்கிறார். இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதினால் பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன். அதன் முடிவு நித்திய ஜீவனாகும் (ரோமர் 6:22). கைகளில் சுத்தம் மற்றும் இருதயத்தில் சுத்தமுள்ளவனே கர்த்தருடைய பர்வதத்தில் எற முடியும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களுக்கு அநேக ஆசிர்வாதங்கள் இருப்பதால் நாமும் அதைப் பெற்றுக் கொண்டுத் தேவ ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுவோம்.




சிந்தனை: பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லாத் திரு ஸ்நானத்தினால்.


ஜெபம்: தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியால் என்னைப் புதுப்பித்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

மனத்தாழ்மை

"உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்." மீகா 6:8 




யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா எரேமியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்புச் செய்து தேவ ஆலயத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கி தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தவில்லை. ஆகவே கர்த்தர் அவனையும் அவன் தேசத்தையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் ஒப்படைத்தார். அவன் பலரைக் கொன்று தேவாலயத்தை அழித்து ராஜாவை சிறைபிடித்தான்.


மேன்மைக்கு முன்னானது தாழ்மை; விழுதலுக்கு முன்னானது மன மேட்டிமை என சாலமோன் ராஜா கூறுகிறார். வாழ்க்கையில் உயர்வு வேண்டுமா? நம்மை ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்த வேண்டும். பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபிக்கும் போது, தன்னைத் தாழ்த்தின ஆயக்காரனை ஆண்டவர் நீதிமானாக்கி உயர்த்தினார். பெருமைபட்டுக் கொண்ட பரிசேயனை வெறுமையாக அனுப்பினார் அல்லவா நம் ஆண்டவர். நான் கட்டிய மகா பாபிலோன் என்று நேபுகாத்நேச்சார் ராஜா தன்னை உயர்த்தியபொழுது, ஆண்டவர் அவனை மனிதனின்று தள்ளினாரே. கிறிஸ்து தன்னை மரண பரியந்தம் தாழ்த்தியதால் நமக்கு இரட்சிப்பு கிடைத்தது. கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்க வேண்டும். கடவுள் நம்மை உயர்த்தும் போது ஒருவரும் அதைத் தடுக்க இயலாது. நம் வாழ்க்கையில் நாம் உயர வேண்டுமானல் நம்மை ஆண்டவருக்கு முன்பாகத் தாழ்த்த வேண்டும். ஆண்டவர் தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். நாமும் ஆண்டவர் கிருபையைப் பெற்றுக் கொள்ளலாமே.



சிந்தனை: தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான்.

ஜெபம்: தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கும் ஆண்டவரே என்னை உம்மிடம் தாழ்த்துகிறேன். என் வாழ்வை வளமாக்கும். ஆமேன்.


ஆண்டவரின் பிரியம்

"ஆயிரங்களான ஆட்டுக் கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ?. "மீகா 6:7


ஒரு நாள் இயேசு மார்த்தாள் வீட்டிற்குச் சென்றார். அவள் இயேசுவுக்கு விருப்பமான சுவையான பலகாரங்கள் கொடுக்க வேண்டும் என்று பல வேலைகள் செய்து கொண்டு இருந்தாள். ஆனால் அவள் சகோதரி மரியாள் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள், மார்த்தாள் இயேசுவிடம் மரியாளைப் பற்றி குறை சொல்லும் போது மரியாள் நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்றார். இயேசுவுக்கு உபசரணையை விட அவர் வார்த்தையைக் கேட்பதுவே அவருக்குப் பிரியம் என்பதை உணர்த்தினார்..


இங்கே மீகா ஆண்டவருக்கு எது பிரியம் என்ற கேள்வியை எழுப்புகிறார். ஆண்டவரை எப்படி ஆராதிக்க வேண்டும்? எப்படி ஆராதித்தால் ஆண்டவர் பிரியப்படுவார் என்பதே அதன் அர்த்தம். இன்றும் ஆண்டவரை பல வழிகளில் ஆராதிக்கிறோம். சிலர் ஆண்டவரை கெம்பீர சத்தமாய் ஆராதிக்கிறோம். வேறுசிலர் ஆண்டவரை அமைதியாகவும், சிலர் ஒழுங்கு முறைகளோடும் ஆராதிக்கிறார்கள். சிலர் ஆண்டவருக்கு உருவம் வைத்து ஆராதிக்கிறார்கள். ஆண்டவருக்கு எது பிரியம்? நம்மைப் பார்த்து ஒருவேளை இப்படிச் சொல்லுவாரோ? இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து உதட்டினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகி இருக்கிறது(மத்தேயு 15:8). நாம் எப்படி ஆண்டவரை ஆராதிக்கிறோம் என்பதைச் சிந்திப்போம்.



சிந்தனை: நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1.

ஜெபம்: என்னை ஜீவ பலியாக உமக்கு ஒப்புவிக்கிறேன், எற்றுக் கொண்டு வழி நடத்தும் ஆண்டவரே.


நீதிகளை நினை

"நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்து கொள்ளும்படி நினைத்துக் கொள்." மீகா 6:5


ஒரு ராஜா தன்னிடம் 10,000 ரூபாய் கடன் பட்டவனை அழைத்து நீ இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்து என்றான். ஆனால் அவனோ ஐயா நான் ஒரு ஏழை, திடுப்பிச் செலுத்த இயலாத நிலையில் உள்ளேன், இன்னும் ஒரு வருடத்தில் அதைத் திரும்பச் செலுத்தி விடுகிறேன் என்றான். ஆனால் அந்த ராஜா அவன் கடனை மன்னித்து நீ திரும்பச் செலுத்த வேண்டாம், அது உனக்கு நன்கொடையாகட்டும் என்றார். ஆனால் அவனோ தன் எதிரே வந்த தன்னிடம் 100 ரூபாய் கடன் பட்டவனை அதைக் கொடுத்துத் தீர்க்கும் வரை காவல் துறையிடம் ஒப்படைத்தான். இதை அறிந்த ராஜா அவனை அழைத்து தாம் சொன்ன வார்த்தையை வாபஸ் வாங்கி இவனையும் சிறையில் அடைத்தான்.


ஆண்டவர் நமக்குப் பாராட்டிய நன்மைகளை நினைவு கூற வேண்டும். மனுஷருடைய தப்பிதங்களை நாம் மன்னிக்காவிட்டால் நாமும் கடவுளின் மன்னிப்பை இழந்து விடுவோம். உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூற வேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். கர்த்தருடைய நீதியை நிலை நாட்டுவோம்.



சிந்தனை: கடவுள் பூரண சற்குணர். நாமும் பூரண சற்குணராயிருப்போம்.

ஜெபம்: ஆண்டவரே, எங்களுக்கு விரோதமாய்க் குற்றம் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும். ஆமேன்.

என் துயரம்

"என் ஜனமே, நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்?"மீகா 6:3


மனிதன் ஏன் கவலைப்படுகிறான்? கவலைக்குக் காரணமே இருப்பதில்லை. யோனாவுக்கு ஆமணக்குச் செடி பட்டுப் போனதைக் குறித்துக் கவலை. மார்த்தாளுக்கு மரியாள் உதவவில்லை என்ற கவலை. சிலருக்கு எதிராளி நன்றாக இருக்கிறானே என்ற கவலை. இவ்வசனம் கூறும் விசனம்(கவலை) என்ன? தவறு செய்த மனிதன் எப்படி ஆண்டவரோடு ஒப்புரவாகலாம் என்ற கவலைதான் காரணம். இது நியாயமானதுதானா? தவறு செய்யும் முன்பு அல்லவா இதை யோசிக்க வேண்டும். ஆனாலும் ஆண்டவர் நம்முடைய பாவங்களை மன்னிக்கிறவர். மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம் நம் பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்(சங்கீதம் 103:12). உன் பாவங்களை நினைக்க மாட்டேன் என்றும் ஆண்டவர் சொல்லுகிறார். அப்படியானல் இது வீண் கவலை. வாருங்கள் என்னிடம் என்று அழைக்கும் ஆண்டவரிடம் பாரங்களை இறக்கி வைப்பது அல்லவா நம் வேலை. நாம் ஏன் தேவை இல்லாததைச் சுமப்பானேன்.



சிந்தனை: தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டு விடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதிமொழிகள். 28:13

ஜெபம்: என் பாவங்களை உமது தூய இரத்தத்தால் கழுவி பரிசுத்தப்படுத்தும் ஆண்டவரே. ஆமேன்.



அகற்றப்படும்

வேதபகுதி:மீகா 5: 12 - 15

சூனிய வித்தைகள் உன் கையில் இல்லாதபடிக்கு அகற்றுவேன் வசனம்:12



முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் மந்திரம், பில்லி சூனியம் போன்றவைகளும் விலக்கப்பட வேண்டும். உண்மையான தொழுகை ஏற்படுவதற்காக விக்கிரக் வணக்கமும் விலக்கப்பட வேண்டும். தேவனுக்குச் செவிகொடத பிற இனத்தவர் மேல் அவர் பலி வாங்குவார்.



ஒரு சராசரி குடும்பத்தினர் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வாரத்திற்கு 26 மணி நேரம் செலவிடுகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.நமது சமுதாயத்தில் நாம் இதைப் போல பல விக்கிரகங்களைப் பெற்றிருக்கிறோம். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். விளையாட்டு, பணம், வேலை, பொழுது போக்குகள் அல்லது மற்ற மக்களும் கூட தேவன் மீதான நமது பயபக்தியை மாற்றும்படி செய்யக்கூடிய பிற காரியங்களாகும். ஒருவேளை இசையோ அல்லது திரைப்படங்களோ அல்லது இன்டர்நெட்டோ நம்மைப் பிடித்திருக்கலாம். விக்கிரகங்கள் வெவ்வேறு வடிவில் வருகின்றன. இந்த விக்கிரகங்களுக்கு விலகி இருங்கள்.




சிந்தனை: நமது வாழ்க்கையில் நமக்குக் கேடுண்டாக்கும் விக்கிரகங்கள் எவை என சிந்தித்துப் பார்ப்போம். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இடையுறாக இருக்கும் எந்த விக்கிரகங்களுக்கும் நாம் இடம் கொடுக்காது நம்மைக் காத்துக் கொள்வோம்.


ஜெபம்: இயேசு கிறிஸ்துவே, என் முழு இருதயத்தோடும் உம்மை நேசிக்க எனக்கு உதவி செய்யும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

உன் கை ஓங்கும்

வேதபகுதி:மீகா 5:9 - 11

உன்னுடைய கை உன் விரோதிகள்மேல் உயரும் வசனம்.9



இஸ்ரவேல் பகைவர்களை வெற்றி கொள்கிற ஒரு போர்வீரனுக்கு சமமாக இங்கே அறிமுகப்படுத்தப்படுகிறது. குதிரைகளை சன்கரிப்பேன், இரதங்களை அழித்து விடுவேன் என்பது போருக்கு பயன்படுத்தக் கூடிய யாவற்றையும் நீக்கி தேவனாகிய கர்த்தர் ஒருவரே ஜெயம் கொடுக்கிறவராக இருப்பார். சமாதானத்தை நிலவச் செய்வார்.



துருக்கியர் கையிலிருந்து எருசலேமை மீட்டுக் கொள்ள ஆங்கில தளகர்த்தர் ஆலன்பீ படையுடன் எருசலேமை வந்தடைந்தபோது அவர் துப்பாக்கியை பிரயோகிக்கவில்லை, ஊக்கமாக ஜெபித்தார். அவர் ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே வலிமை வாய்ந்த படை ஒன்று எருசலேமை அணுகிக் கொண்டிருக்கிறது என்ற செய்தி துருக்கியரிடையே பரவியது. தேவனே தமது சேனையைக் கொண்டு தங்களை அழிக்க வந்து விட்டார் என துருக்கியர் எண்ணி நடுங்கினர். தேவனே வெற்றி சிறக்கப் பண்ணினார்.



யூதர் இவை எல்லாவற்றையும் கண்டனர். அவர்கள் எப்பொழுதும் போலவே இருக்கின்றனர். அவர்கள் எத்தகைய வீழ்ச்சியையும், எத்தகைய பலவீனத்தையும் தங்கள் சத்துவத்தில் எத்தகைய குறைவையும் காணவில்லை.யூதரைத் தவிர எல்லா வல்லமைகளும் அழிந்தொழிந்தன. யூதருடைய நித்தியத்தின் காரணமென்ன?



சிந்தனை: தமது ஜனங்களை சாத்தானின் கையிலிருந்து விடுவிக்க அவரே நமக்காக யுத்தம் பண்ணுவார். அவரை நம்பி பற்றிக் கொண்டால் நம்முடைய எல்லாக் காரியங்களிலும் வெற்றி சிறக்கப் பண்ணுவார்.


ஜெபம்: தேவனே, சத்துருவான சாத்தானின் கையிலிருந்து என்னை விடுவித்துக் காத்துக் கொள்ளும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்