மதியம் சனி, 13 அக்டோபர், 2007

எதில் கைதேர்ந்தவர்கள்

வேதபகுதி:மீகா 7:3

பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும். வசனம் .3





தீமை செய்வதில் இவ்வுலகத்தார் கைதேர்ந்தவர்கள். சுரண்டல் நிறைந்த உலகம் அரசியல், அதிகாரம், மதம், இனம், ஜாதி, வியாபாரம் போன்ற போர்வைகளை போட்டு மூடிக்கொண்டு யாருக்கும் தெரியாது என் நினைத்துக் கொண்டு சுரண்டி வாழும் சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எள்ளளவும் கூட சுரண்டாமல் உலகத்தில் உண்மையாக வாழமுடியாது என்று சவால் விடும் மக்களுக்கிடையில் கிறிஸ்தவராகிய நம்முடைய பதில் என்னவாக இருக்கும்.



ஒரு வேளை பணப்ப்ரிமாறாம் கணிணி மூலமாக நாணயமாக நடைபெறும் என்று எதிர்பார்த்தவர்கள் சைபர் க்ரைம் மிகுதியாகி தத்தளிக்கிறார்கள். எங்கு என்ன வேலை ஆக வேண்டுமானாலும் லஞ்சம் கொடுக்காமல் ஒன்றும் நடக்காது. என்ன செய்வது? அஹா! லஞ்ச ஒழிப்பிற்கு சட்டங்கள் தான் எத்தனை. பணத்துக்காக எதையும் செய்யத்துணியும் ஒரு சமுதாயம். கண்களை மூடி உலகத்துக்கு ஒத்துப் போகனுமா அல்லது எதிர் நீச்சல் போடமுடியுமா? என்ன தீர்மானிக்கப் போகிறீர்கள். முதலாவது உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்று தீர்மானியுங்கள்.





சிந்தனை: தீமை செய்ய நாடுதென்றன் திருக்குநெஞ்சமே
மருள் தீர்க்கும் தஞ்சமே
தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே.


ஜெபம்: தூய ஆவியானவரே, எங்கள் பொல்லாத செயகளை மன்னித்து , இந்த மாயமான உலகத்தில் பரிசுத்தமாய் ஜீவிக்க அருள் புரியும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

Ammu சொன்னது…

\\கண்களை மூடி உலகத்துக்கு ஒத்துப் போகனுமா அல்லது எதிர் நீச்சல் போடமுடியுமா? என்ன தீர்மானிக்கப் போகிறீர்கள்.\\

ஹாய், மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வலைதளம்,
உலகத்தாருக்கு ஒத்த வேஷம் தரிக்கவேண்டாம் என்று வேதம் சொல்லுகிறது.........அதனை நினைவில் கொண்டால், உலகத்தின் பாவக் கரைகளுக்கு நம்மை தப்புவித்துக் கொள்ளலாம் அல்லவா?

Ammu சொன்னது…

Hi Jones,When time permits visit my blog

http://anbudanammu.blogspot.com/