"உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்." மீகா 6:8
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா எரேமியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையைக் கேட்காமல் கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்புச் செய்து தேவ ஆலயத்தை பரிசுத்தக்குலைச்சலாக்கி தேவனுக்கு முன்பாகத் தாழ்த்தவில்லை. ஆகவே கர்த்தர் அவனையும் அவன் தேசத்தையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் ஒப்படைத்தார். அவன் பலரைக் கொன்று தேவாலயத்தை அழித்து ராஜாவை சிறைபிடித்தான்.
மேன்மைக்கு முன்னானது தாழ்மை; விழுதலுக்கு முன்னானது மன மேட்டிமை என சாலமோன் ராஜா கூறுகிறார். வாழ்க்கையில் உயர்வு வேண்டுமா? நம்மை ஆண்டவருக்கு முன்பாக தாழ்த்த வேண்டும். பரிசேயனும், ஆயக்காரனும் ஜெபிக்கும் போது, தன்னைத் தாழ்த்தின ஆயக்காரனை ஆண்டவர் நீதிமானாக்கி உயர்த்தினார். பெருமைபட்டுக் கொண்ட பரிசேயனை வெறுமையாக அனுப்பினார் அல்லவா நம் ஆண்டவர். நான் கட்டிய மகா பாபிலோன் என்று நேபுகாத்நேச்சார் ராஜா தன்னை உயர்த்தியபொழுது, ஆண்டவர் அவனை மனிதனின்று தள்ளினாரே. கிறிஸ்து தன்னை மரண பரியந்தம் தாழ்த்தியதால் நமக்கு இரட்சிப்பு கிடைத்தது. கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்க வேண்டும். கடவுள் நம்மை உயர்த்தும் போது ஒருவரும் அதைத் தடுக்க இயலாது. நம் வாழ்க்கையில் நாம் உயர வேண்டுமானல் நம்மை ஆண்டவருக்கு முன்பாகத் தாழ்த்த வேண்டும். ஆண்டவர் தாழ்மை உள்ளவர்களுக்கு கிருபை அளிக்கிறார். நாமும் ஆண்டவர் கிருபையைப் பெற்றுக் கொள்ளலாமே.
சிந்தனை: தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப் படுவான்.
ஜெபம்: தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கும் ஆண்டவரே என்னை உம்மிடம் தாழ்த்துகிறேன். என் வாழ்வை வளமாக்கும். ஆமேன்.
மதியம் வியாழன், 11 அக்டோபர், 2007
மனத்தாழ்மை
Labels:
தின தியானம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக