இடறல்

வேதபகுதி: மத்தேயு 18 :6 - 10


"என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்."மத்தேயு 18 :6



இடறல் என்பது கிறிஸ்துவின் நாமம் எந்த இடங்களில் எல்லாம் பரிசுத்தக்குலைச்சலாக்கப் படுகிறதோ அல்லது அவருடைய நாமம் எங்கெல்லாம் தூஷிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் மற்ற மக்களைக் கிறிஸ்துவினண்டை வருவதற்கு இடறல் உண்டாக்குகிறோம்.



நாம் எப்பொழுதெல்லாம் இடறல்களை உண்டாக்குகின்றோம் என்று பார்ப்போமானால்

1. இவனெ(ளெ)ல்லாம் ஒரு கிறிஸ்தவனா/கிறிஸ்தவளா என்று மற்ற மக்களால் சொல்லப்படுகின்றபோது(புகை, மது)
2. புதிதாகக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் நாம் செய்கின்றப் பாவமானக் காரியங்களுக்குள்ளே வழிநடத்தும் போது(திருச்சபை அரசியல்)
3. உலகத்தையும் அதின் காரியங்களையும் நாம் நேசித்து இறைவனை விட்டு விடும் போது (பெயர்க் கிறிஸ்தவர்கள் ஆகும் போது)



இப்படி இடறல் உண்டாக்குகின்றக் காரியங்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம். நாம் மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்குகிறவர்களாக இருப்போமானால் எந்திரக் கல்லைக் கழுத்தில் கட்டிக் கடலின் ஆழத்திலே போய் அமிழ்த்த வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதன் பொருள் என்னவென்றால் நமக்கு ஆசிர்வாதம் கிடையாது மாறாகச் சாபம் தான் வந்து சேரும்.





சிந்தனை: நம்முடையக் கிரியைகள் மற்றவர்கள் கிறிஸ்துவினண்டை வருவதற்கு உதவியாக இருக்கிறதா? அல்லது இடறல் உண்டாக்குகிறவர்களாக இருக்கிறோமா?


ஜெபம்:
தேவனே நான் மற்றவர்களை உம்மண்டை வழிநடத்தும் கருவியாக என்னைப் பயன்படுத்தும். அதற்கு என்னுடையக் கிரியைகள் சாட்சியாக இருக்க உதவி புரியம். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்