வேதபகுதி:யாக்கோபு 1 : 16 - 18
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்......பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது வசனம் 17
பூரணம் என்பது உறுதிப்பட்ட நிலை என்பதாகும். ஒரு மண்பானை (அ) செங்கல் பூரணமாக வேகாவிட்டால் அது ஒரு பொருளாகக் காட்சியளித்தாலும், அவை சீக்கிரமாகப் பயனற்றதாகிவிடும். உணவுப் பொருளும் பூரணமாக வேகாவிட்டால் நன்மை பயக்காது. உடல் நலக்கேடு ஏற்படுத்தும்.
ஒரு கட்டடம் பூரணமாக வேலை முடிந்தபின் பார்த்தல் தான் அழகு காணப்படும். கல்வியிலும் பூரணமாகத் தேறாவிடில் வேலை கிடைப்பது கடினம். மேற்படிப்பு படிப்பதற்கும் முடியாது. அது போல ஆண்டவருக்குள் நாம் பூரணமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எதில் எல்லாம் என்று பார்ப்போமானால்
- சற்குணத்தில் பூரணப்படவேண்டும் - மத்தேயு 5:40
- பரிசுத்தமாக்குதலை தேவபயத்தோடு பூரணப்படுத்த வேண்டும் 1 கொரிந்தியர் 7 :1
- பொறுமையில் பூரணராக இருக்க வேண்டும் - யாக்கோபு 1 :4
- விசுவாசத்தில் பூரணமாயிருக்க வேண்டும் யாக்கோபு 2 :22
- உலகுக்குப் பயப்படாத பூரண அன்பு பெற வேண்டும் - 1 யோவான் 4 :18
ஆண்டவரே நம்மைப் பூரணப்படுத்துகிறார். மனிதனின் பாவம் தேவனுக்கும் நமக்கும் தடுப்புச் சுவர். பாவ மன்னிப்புக்காக ஓரே பலியாக ஏசுவைப் பிதாவானவர் அனுப்பி, நமக்கும் அவருக்கும் உள்ள தடைகளை நீக்கி நம்மைப் பரிசுத்தமாக்கி பூரணப்படுத்தி இருக்கிறார் என்று அறிந்து கர்த்தரைத் துதிப்போம். அவர் நம்மைப் பரிபூரண ஆசிர்வாதங்களால் நிரப்புகிறவர் என்று அறிந்து நன்றி செலுத்துவோம்.
சிந்தனை: அவர் நம்மிடத்தில் அன்பு கூர்ந்து தமது இரத்தத்தினால் நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவினார்(பூரணப்படுத்தினார்).
ஜெபம்: ஆண்டவரே, என்னை உம்முடைய நன்மையினால் பூரணப்படுத்தி உமது இரத்தத்தினால் கழுவி சுத்தப்படுத்தும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக