மதியம் செவ்வாய், 27 நவம்பர், 2007

ஞானம் கிடைக்கும்

வேதபகுதி: யாக்கோபு 1: 5 - 8


உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். வசனம் 5



கல்லூரியில் படிக்கும் வாலிபன் தனது கல்லுரிப்படிப்பில் இரண்டு முறை தோல்வியடைந்தான். இந்தத் தோல்வியால் அவனுக்கு வாழ்க்கை கசந்தது. மன நிம்மதியில்லாமல் இருந்தபோது அவன் இயேசுவை அறிந்தான். தன் பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டுப் புதிய வாழ்வு பெற்றான்.



இப்பொழுது அவன் உள்ளத்தில் ஒரு புதிய நம்பிக்கை உண்டானது. இனி நான் தேவனுடைய பிள்ளை. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்(நீதிமொழிகள் 2:6). எனவே அவர் எனக்கு உதவி செய்வார் என நம்பினான். ஊக்கமாக ஜெபித்தான், படித்தான், பட்டம் பெற்றான்.




நமது ஆண்டவர் ஞானத்தை சாலமோன் ராஜாவுக்கு மட்டுமல்ல, விசுவாசத்தோடு கேட்கிற யாவருக்கும் கொடுக்க மனதுள்ளவர். அவர் பட்சபாதமுள்ளவர் அல்லவே.



கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்(மத்தேயு 7 : 7,8).



கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஞானத்தையும் புத்தியையும் வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.




சிந்தனை: தேவனுக்குப் பயந்து ஜீவிப்போமானால், இவ்வுலக வாழ்விற்குரிய ஞானத்தையும் நித்திய வாழ்வையும் நமக்குத் தந்து ஆசிர்வதிப்பார்.


ஜெபம்: தேவனே உமக்குப் பிரியமாய் நடக்க ஞானமுள்ள இருதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

1 comments:

Ammu சொன்னது…

\\நமது ஆண்டவர் ஞானத்தை சாலமோன் ராஜாவுக்கு மட்டுமல்ல, விசுவாசத்தோடு கேட்கிற யாவருக்கும் கொடுக்க மனதுள்ளவர். அவர் பட்சபாதமுள்ளவர் அல்லவே.\\

இன்றைய மாணவர்கள் இதை நினைவில் வைத்துக்கொண்டு, தங்கள் கல்வியினை முழுவதும் கர்த்தர் பாதத்தில் வைத்து, அவரது சம்பூரணமான ஞானத்தை பெற்றால் மென்மேலும் தங்கள் கல்வியறிவில் வளரலாம்!