மதியம் புதன், 28 நவம்பர், 2007

ஐசுவரியம் வாடுமோ

வேதபகுதி:யாக்கோபு 1 - 9 - 11


பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான் வசனம் 2



யாக்கோபு நிருபம் மற்ற நிருபங்களிலிருந்து வித்தியாசமானது. இந்த நிருபத்தில் கிருபைக்குரிய கிரியை செய்ய வேண்டிய செயல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இவைகள் நம்முடைய வாழ்வில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய காரியங்கள் ஆகும். ஐசுவரியத்தைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது? ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதீர்கள் (சங்கீதம் 62:10). தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் (நீதிமொழிகள் 11:28)



கி.பி. 1900ல் மார்ட்டின் என்ற ஏழ்மையான விவசாயி அமெரிக்காவிலுள்ள நியுயார்க்கில் வாழ்ந்து வந்தார். தேவபக்தியுள்ள மனிதர். ஆலயம் செல்வதில் தவறுவது இல்லை. தனக்கு வருமானம் உண்டாயிருக்க்கப் பால்மாடு ஒன்றை விலைக்கு வாங்கினார். பால்பண்ணை பெருகியது. பெரும் தனவந்தன் ஆனார். இறைவனை விட்டு விலகி, பால்பண்ணையே கதி என முழுவதும் அதிலே தனது நேரத்தைச் செலவு செய்தார். ஒருநாள் மாடுகளுக்குத் தண்ணிர் காட்டச் சென்றபோது ஒரு மாடு தவிர அனைத்தும் செத்துக்கிடந்தது. உள்ளம் உடைந்தது. அவரால் ஜீரணிக்க முடியவில்லை.




தன் தவறை உணர்ந்தார். இறைவனிடம் தன் தவறை அறிக்கை செய்து மீண்டும் தன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார். எபேசியர் 3:8ன் படி ஐசுவரியத்தை நம்பிக் கெட்டுப்போனேன் என்று அங்கலாய்த்தார்.




சிந்தனை: கர்த்தரானவர் தம்மைத் தொழுது கொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரிய சம்பன்னராய் இருக்கிறார். ரோமர் 10:12


ஜெபம்: ஆண்டவரே ஐசுவரியத்தை விரும்பி, நாடி ஓடாமல் வாடாத கிரீடத்தைப் பெற உம்மை நாடி ஓடி வரக் கிருபை செய்யும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

1 comments:

Ammu சொன்னது…

வாடாத கிரீடத்தை பெறும்படியான ஜெபம் அருமை.

உங்கள் புதிய வலைத்தளம் நன்றாகயிருக்கிறது,

தொடர்ந்து எழுதுங்கள், கர்த்தர் அநேக ஆத்துமாக்களை உங்கள் எழுத்தின் மூலம் சந்திப்பார்!