மதியம் செவ்வாய், 19 பிப்ரவரி, 2008

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்

வேதபகுதி: ஏசாயா 41: 8 - 13


"நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்து கொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன்." ஏசாயா 41: 9



நமது ஆண்டவராகிய கர்த்தர் நம்மைப் பார்த்து நீ என் தாசன் நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக உரைக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை எகிப்து தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு வழிநடத்தி அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த தங்கள் தேவனை மறந்து விக்கிரகங்களைத் தெரிந்துக் கொண்டு பாவ வழிகளில் நடந்ததினால் அவர்களை அந்நிய ராஜாக்களுக்கு அடிமைகளாக விற்றுப்போட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய ராஜாக்களுக்கு அடிமைப்பட்டு அவர்களைச் சேவித்தார்கள்.



இப்படிப்பட்ட காலக்கட்டத்தில் தான் ஆண்டவர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக இஸ்ரவேல் ஜனங்களுக்கு நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் நீ உன்னுடையப் பாவ வழிகளை விட்டு மனந்திரும்பி வருவாயானால் நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவேன் என்று கூறுகிறார். நாமும் நம்முடையப் பாவ வாழ்க்கையை விட்டுத் திரும்பி கிறிஸ்துவினண்டை வருவோமானால் நம்மையும் அவர் ஆபிரகாமின் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு நம்மையும் தாங்கி வழிநடத்துவார்.




சிந்தனை: நான் கிறிஸ்துவைப் பின்பற்றி நடக்கிறேனா?


ஜெபம்:
ஆண்டவரே நான் உம்மைப் பின்பற்றி நடக்க எனக்கு உதவி புரியும். ஆமேன்



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்