வேதபகுதி:மத்தேயு 6 : 25 - 34
"நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்" மத்தேயு 6:34
இன்றையக் காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய ஒவ்வொரு காரியங்களுக்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பெற்றோருக்குப் பிள்ளைகளைக் குறித்துக் கவலை, மாணவர்களுக்குத் தேர்வைக் குறித்துக் கவலை. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரியத்திற்காகக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் நம்முடையக் கவலைகளைத் தேவனுடையப் பாதத்தில் ஊற்றிவிடும் போது தேவன் அவைகள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார்.
ஒரு தேவ ஊழியர் ஒரு நாள் கடற்கரையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அவர் நடந்து சென்றுக் கொண்டிருக்கும் போது இரண்டு நபர்களுடையக் காலடித் தடம் அங்கு விழுவதைப் பார்த்தார். அவர் தேவனிடம் ஆண்டவரே நான் ஒருவன் தானே இந்தக் கடற்கரையில் நடந்து செல்கிறேன் ஆனால் இரண்டுக் காலடித்தடம் விழுகிறதே என்று கேட்டார். அதற்குத் தேவன் நானும் உன் கூடவே நடந்து வருகிறேன் ஆகவே தான் இரண்டுக் காலடித்தடம் விழுகிறது என்று சொன்னார். இப்படி அவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கரடு முரடான பாதை ஒன்றின் வழியாக நடந்து சென்றாராம். அப்பொழுது ஒரு நபருடையக் காலடித் தடம் மட்டுமே விழுவதை கண்டாராம். உடனே அவர் ஆண்டவரிடம் தேவனே இப்பொழுது ஒரு காலடித்தடம் மட்டும் தானே விழுகிறது நான் கரடு முரடானப் பாதையில் நடக்கும் போது எங்கே போனீர்? என்று கேட்டாராம் அதற்கு ஆண்டவர், மகனே கரடு முரடான பாதையில் நீ நடக்கும் போது நான் உன்னைத் தூக்கிக் கொண்டு நடந்தேன், தரையிலே பதிந்தது உன்னுடைய காலடித்தடம் அல்ல அது என்னுடையக் காலடித் தடம் என்று சொன்னாராம்.
ஆம் பிரியமானவர்களே, நாம் தேவனுடையப் பிள்ளைகளாகி அவருடைய ராஜ்ஜியத்திற்குரியப் பிள்ளைகளாக நடக்கும் போது தேவன் நம்முடையக் கவலைகளையெல்லாம் பார்த்துக்கொள்ளுவார். அவர் நம்மைத் தாங்கி ஏந்தி நம்மை எல்லாத் தீங்கிற்கும் விலக்கிப் பாதுகாப்பார்.
நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமானால் நமக்குக் மனக்கவலையும் உடல் சோர்பும் தான் ஏற்படும். எனவே நாம் செய்ய வேண்டியது நம்முடையக் கவலைகளையெல்லாம் தேவனுடைய பாதத்தில் ஊற்றிவிடுவோம்.
சிந்தனை: :"நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள்.
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.பிலிப்பியர் 4:6,7"
ஜெபம்: தேவனே நான் தேவனுடைய ராஜ்ஜியத்தின் பிள்ளையாக நடந்து அதன் மூலமாக கவலைகளையெல்லாம் மறக்கக் கிருபை தாரும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
2 comments:
//நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமானால் நமக்குக் மனக்கவலையும் உடல் சோர்பும் தான் ஏற்படும். எனவே நாம் செய்ய வேண்டியது நம்முடையக் கவலைகளையெல்லாம் தேவனுடைய பாதத்தில் ஊற்றிவிடுவோம்.//
அருமையான விளக்கம் மேலான உதாரணங்களோடு...
\\ திவ்யப்ரகாஷ் said...
//நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமானால் நமக்குக் மனக்கவலையும் உடல் சோர்பும் தான் ஏற்படும். எனவே நாம் செய்ய வேண்டியது நம்முடையக் கவலைகளையெல்லாம் தேவனுடைய பாதத்தில் ஊற்றிவிடுவோம்.//
அருமையான விளக்கம் மேலான உதாரணங்களோடு...\\
பிரகாஷ் தங்களுடைய மேலான ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
கருத்துரையிடுக