நவீன காலத்தில் வாழுகின்ற கிறிஸ்தவர்கள் தங்களுடைய செய்கைகளில் மாற்ற வேண்டியக் ஒரு சிலக் காரியங்கள்
1.ஜெபவேளை
இன்றையக் காலங்களில் ஆராதனை நடக்கும்போது ஜெப வேளைகளில் மக்கள் முழங்கால் படியிடுவதைப் பார்க்க முடிவதில்லை. நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அல்லது தரையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாம் நம்மைப் படைத்த தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்தும் போது தான் அவரும் நம்மேல் பிரியம் கொண்டு நம்மை ஆசீர்வதிப்பார்.
"கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்." யாக்கோபு 4:10
ஆராதனை நேரங்களில் செல்போனை அனைத்து விடுவது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் ஞாயிறு ஆராதனை நேரங்களில் தயவு செய்து என்னை செல்போனில் அழைக்க வேண்டாம் என்று கூறி நல்லது. அதிலும் ஒரு சிலர் சினிமாப் பாடல்களை ரிங்டோனாக(Ring Tone) வைத்துக் கொள்ளுகிறார்கள். ஆராதனை நேரத்தில் அவர்களது செல்போன் அடிக்கும் போது அனைத்து மக்களும் அவர்களைப் பார்க்கின்றார்கள். இது ஆராதனை நடத்துபவர்களுக்கும் ஆராதனையில் பங்கு பெற்றிருப்பவர்களுக்கும் மிகுந்த இடையூறாக இருக்கும். கண்டிப்பாக எனக்கு செல்போனில் அழைத்தவர் எண் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றால் ஒன்று சைலன்டில்(Silent) வையுங்கள் அல்லது கால் டைவர்டில்(Call Divert) வையுங்கள். ஒரு சில செல்போன் நிறுவனங்கள் இந்தச் சேவையை இலவசமாக வழங்குகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கர்த்தரை ஆராதிக்கத்தான் வந்திருக்கின்றோம் என்பதை உணருங்கள். வாரத்திலுள்ள மற்ற ஆறு நாட்களும் நம்முடையக் காரியங்களுக்காகச் செலவிடுகின்றோம் ஆனால் நம்மை ஆசீர்வதித்தக் கர்த்தருக்காக ஒரு இரண்டு மணி நேராமாவது உங்களால் செலவிட முடியாதா?
3.பாடல் வேளை:
அநேகர் பாடல் வேளைகளின் போது தங்களது வாய்களைத் திறந்து பாடுவது கிடையாது, ஒரு சிலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இவர்களைச் சினிமாப் பாடலைப் பாடச் சொன்னால் அப்படியே மனப்பாடமாகப் பாடுவார்கள். கேவலம். இவர்கள் துதியின் வல்லமைகளை உணராதவர்கள். துதியினாலே எரிகோவின் கோட்டை இடிந்து விழுந்ததையும் சிறைச்சாலையில் பவுலும் சீலாவும் பாடியபோது சிறைச்சாலைக் கதவு திறந்ததையும் அதன் மூலமாக சிறைச்சாலைத் தலைவனுடையக் குடும்பம் இரட்சிக்கப்பட்டதையும் இவர்கள் எங்கு அறியப் போகிறார்கள்.பாடகர் குழு மட்டுமே பாட வேண்டும் என்று நினைக்காமல் நம்முடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரைத் துதித்துப் பாடும் போது கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.
4. காலணிகள்:
அநேகர் தாங்கள் தெருக்களிலே உள்ளக் குப்பைகளையெல்லாம் மிதித்துக் கொண்டு வந்தக் காலணிகளோடுக் கூட ஆலயங்களிலே வருகிறார்கள், ஒரு சிலர் ஒரு படி மேலே போய் நன்றிக் காணிக்கைகளை ஏறெடுக்கச் செல்லும் போது கூடத் தங்களுடையக் கால்களில் காலணி அணிந்துச் செல்கின்றார்கள். ஆலயம் என்பது பரிசுத்தமான இடம் என்பதை உணர வேண்டும். இவர்களால் புறமதத்தவர்களுடைய வழிபாட்டு இடங்களுக்குக் காலணிகளுடன் செல்லமுடியுமா? அல்லது ஒரு சில மருத்துவர்களைப் பார்ப்பதற்குக் காலணியுடன் செல்லமுடியுமா? அல்லது ஒரு சில இன்டெர்நெட் புரொவுசிங் சென்டர்களுக்குக் (Internet Browsing Center) காலணியுடன் செல்லமுடியுமா? ஏன் பரிசுத்த ஆலயத்திற்கு இந்த மதிப்புக் கொடுக்கிறீகள். உங்களுடையப் படுக்கை அறைக்குக் கொண்டுச் செல்லமுடியாதவைகளை மட்டும் ஏன் ஆலயத்திற்கு உள்ளே போட்டுக் கொண்டு வருகிறீர்கள். நாம் இருக்கின்ற இடம் பரிசுத்தமான இடம் என்பதை உணர வேண்டும். அப்போழுது தான் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
5.வேதாகமம்:
ஆலயத்திற்கு வரும்போது கண்டிப்பாக வேதாகமத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வர வேண்டும். நாம் படிப்பதற்குக் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்லும்போதோ அல்லது அலுவகங்களுக்குக் கோப்புகளைக் கொண்டுச் செல்லும்போது நாம் தேவையானவைகளைப் பை நிறைய எடுத்துக் கொண்டுச் செல்கிறோமே ஆனால் ஆலயத்திற்கு வரும் போது ஏன் உங்களால் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு வரமுடிவதில்லை. ஒரு சிலரோ வேதாகமத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வருவதோடு சரி ஆனால் வேதபாடங்கள் வாசிக்கப்படும் போதும் செய்தி வேளையின் போதும் திறந்து பார்ப்பதே கிடையாது. மேலும் வேதாகமத்தை நாம் வாங்கி வைத்தால் மட்டும் போதாது, தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வாசித்து தியானம் செய்ய வேண்டும். நாம் கர்த்தரை இந்த உலகத்தில் அறிக்கைப் பண்ணும் போது தான் கர்த்தரும் நம்மை இவர்கள் என்னுடையப் பிள்ளைகள் என்று அறிக்கை பண்ணுவார்.
"மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்" மத்தேயு 10:32
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனைக்கு மட்டும் வந்தால் போதாது செய்தி வேளையின் போது செய்தியாளர் கொடுக்கின்றச் செய்தியை நாம் கவனமுடன் கேட்கவேண்டும். கேட்பதோடு மட்டும் அல்லாது அதில் இருந்து நாம் நம்முடைய வாழ்க்கையில் திருத்த வேண்டியக் குறைகளைத் திருத்த முற்பட வேண்டும்.. அப்படி நாம் நடக்கும் போது தான் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல நாமும் கர்த்தருக்குள் நற்கனியுள்ள வாழ்க்கையை வாழ முடியும். ஒரு சிலர் செய்தி வேளைதான் நமக்கு ஒய்வு எடுக்கக்கூடிய நேரம் என்றெண்ணி நன்றாகத் தூங்குகிறார்கள். நாம் இப்படிச் செயல்பட்டால் அது நமக்குச் சாபத்தையும் ஆசீர்வாதக் குறைவையும் தருவிக்கும். இப்படிச் செய்வதனால் நாம் ஏன் கர்த்தருடையக் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.
"வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது."நீதிமொழிகள் 28:9
குறை கூறுவது என்பது மிகவும் எளிதானது எனவே நாம் போதகர்களையும் நிர்வாகிகளையும் மிகவும் எளிதில் குறை கண்டுபிடித்துவிடலாம். நாம் நம்முடையக் கண்களில் உத்திரத்தை வைத்துக் கொண்டு மற்றவர்கள் கண்களில் உள்ளத் துரும்பைப் பார்ப்பது ஏன்?. நாம் குறை கூறுவதை விட்டு விட்டு நம்மால் முடிந்தவைகளை ஆலயக் காரியங்களில் செய்வோம். நாம் அவர்கள் மனம் மாறுவதற்காக ஜெபிப்போம். அவர்கள் தவறு செய்திருந்தால் கடவுள் அவர்களுக்குத் தண்டனையைக் கொடுப்பார். மனிதனாகப் பிறந்த ஒருவனும் நீதிமான் அல்லவே. மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்கு நாம் யார்? நாம் நீதிமானோ? அல்லவே. பின்னே நம் வேலையை நாம் பார்க்கவேண்டியது தானே அவர்களைக் குறை கூறி நாம் ஏன் அவர்களின் வெறுப்பையும் அவர்களுக்குக் கடவுள் தரும் சாபத்தையும் குறைக்க வேண்டும். எல்லாவற்றையும் நியாயந்தீர்ப்பதற்கு நியாயாதிபதி ஒருவர் இருக்கிறார், அவர் பார்த்துக் கொள்ளுவார்.
8.வேடிக்கைப் பார்த்தல்:
நாம் ஆலயத்திற்கு வந்திருப்பது இறைவனை ஆராதிப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம் என்பதை உணர வேண்டும். வேடிக்கைப் பார்பதென்றால் பூங்காவிற்கோ அல்லது பொழுது போக்குவதற்கான இடங்களுக்கோச் செல்லுங்கள். நீங்கள் ஆலயத்திற்கு வந்து ஏன் மற்றவர்களைக் கெடுக்க வேண்டும்.
9. சண்டை போடுதல்
போதகரிடத்திலோ அல்லது நிர்வாகிகளிடமோ உங்களுக்கு மனஸ்தாபம் இருந்தால் அவைகளைத் தேவனுடைய சமுகத்தில் ஊற்றி விடுங்கள். நீங்கள் கர்த்தரிடத்தில் ஊற்றி விடும்போது அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார் மாறாக நீங்கள் ஆலயத்திலே அவர்களிடம் வாக்குவாதம் செய்யும் போது மீண்டும் ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் ஏற்பட்டுப் பிரிவினைகளை உண்டாக்கும். இதனைப் பார்க்கின்ற புறமதத்தவர் மத்தியில் கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படுவதற்கு ஏதுவாகும். இதனால் உங்களுக்கு ஏன் சாபத்தை வருவித்துக் கொள்ளவேண்டும்.
10.கூடுகைகளில் பங்குபெறுதல்:
நாம் ஆலயத்திற்குச் செல்வதோடு மட்டுமல்லாமல் அங்கு நடைபெறுகிற சிறுவர், வாலிபர், ஆண்கள் மற்றும் பெண்கள் கூடுகைகளில் நமக்குரிய தகுதிகளுக்கு ஏற்பப் பங்குபெறவேண்டும். நாம் அப்படிப் பங்குபெருகின்ற போது நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும்.
11. நேரம் தவறாமை:
நாம் ஆலயத்திற்கு ஆராதனை ஆரம்பிக்கும் முன்பதாகவே வருவது மிகவும் சாலச் சிறந்ததாகும். அலவலகங்களுக்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நாம் சரியான நேரத்திற்குச் செல்லுகின்ற நாம் ஏன் ஆலய ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகப் பிரகாரமான ஆசிர்வாதங்களைத் தந்துள்ள கடவுளை நாம் தேடாமல் விட்டு விட்டால் அவரும் உங்களைக் கைவிடுவார்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரியங்கள் அனைத்தையும் கடைபிடிக்க முயற்சிப்போம். கர்த்தர் நம்மை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்: கர்த்தாவே இந்தப் பகுதியில் குறிப்பிட்டவைகளையெல்லாம் கைக்கொண்டு நடந்து அதன் மூலமாக மற்ற மக்களை உம்மண்டை வழிநடத்தும் கருவியாக என்னைப் பயன்படுத்தும். ஆமேன்
6 comments:
அன்புள்ள ஜோன்ஸ்,
உங்கள் கருத்துக்களின் நேர்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. கிறீத்துவம் என்பது வெறும் சடங்குகளுக்கும் ஆராதனைகளுக்கும் முன்னுரிமையைத் தரும் ஒரு இயக்கமாக நின்றுவிடக் கூடாது. இயேசுவின் வாழ்க்கை அப்படிப்பட்டதாயில்லை. அவர் செய்தது ஒரு மாபெரும் புரட்சி. போதகர்களையும், பூசகர்களையும் அவர் கடவுள் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிடவில்லை. சமூக மாற்றத்தில், மனித உறவுகளில் ஆன்மீகத்தை ஒரு செயலாக்கமாகப் பார்க்கவேண்டியது அவசியம். வெறும் சடங்குகளில் ஒழுங்கைக் கடைபிடிப்பது மட்டுமே கிறீத்துவமாகிவிடுமா?
சடங்குகளின் உள்ளர்த்தங்கள் வெறும் இறை புகழ்ச்சி மட்டுமல்ல. அதில் புரட்சியையும், மாற்றத்தையும் கண்டெடுக்க வேண்டியது அவசியம். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் சக்தியைத் தராத ஆன்மிகம் வெறும் சடங்கு மட்டுமே. அதனால் மனிதனுக்கு எந்த லாபமும் இல்லை. இதைத்தான் இயேசுவும் சொன்னார், செய்தார்.
கர்த்தருடைய பிள்ளைகள் கைக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு தெளிவாக எழுதியுள்ளீர்கள்,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாற்றங்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டிய ஒன்று.
\\நாம் ஆலயத்திற்கு ஆராதனை ஆரம்பிக்கும் முன்பதாகவே வருவது மிகவும் சாலச் சிறந்ததாகும். அலவலகங்களுக்கு மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நாம் சரியான நேரத்திற்குச் செல்லுகின்ற நாம் ஏன் ஆலய ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகப் பிரகாரமான ஆசிர்வாதங்களைத் தந்துள்ள கடவுளை நாம் தேடாமல் விட்டு விட்டால் அவரும் உங்களைக் கைவிடுவார்.\\
என்னை சிந்திக்க வைத்தது இந்த வரிகள்,
மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்,
God Bless you !!
Keep writing & shine for the Lord!!!
// சிறில் அலெக்ஸ் said...
அன்புள்ள ஜோன்ஸ்,
உங்கள் கருத்துக்களின் நேர்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. கிறீத்துவம் என்பது வெறும் சடங்குகளுக்கும் ஆராதனைகளுக்கும் முன்னுரிமையைத் தரும் ஒரு இயக்கமாக நின்றுவிடக் கூடாது. இயேசுவின் வாழ்க்கை அப்படிப்பட்டதாயில்லை. அவர் செய்தது ஒரு மாபெரும் புரட்சி. போதகர்களையும், பூசகர்களையும் அவர் கடவுள் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிடவில்லை. சமூக மாற்றத்தில், மனித உறவுகளில் ஆன்மீகத்தை ஒரு செயலாக்கமாகப் பார்க்கவேண்டியது அவசியம். வெறும் சடங்குகளில் ஒழுங்கைக் கடைபிடிப்பது மட்டுமே கிறீத்துவமாகிவிடுமா?//
அலெக்ஸ் நான் உங்களது கருத்தையும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் ஆராதனைகளில் மட்டும் தான் சரியாகச் செய்ய வேண்டும் என்ற கருத்துடன் நான் இங்குக் கூறவில்லை. என்னுடைய மற்றப் பதிவுகளைப் பார்த்தார்ல் இது புரியும். நாம் இறைவனுக்குப் பயந்து நடக்கும்போது கண்டிப்பாகச் சமூகங்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய முடியும். இறை மைந்தனும் அதனைத் தான் நமக்குக் கற்பித்திருக்கின்றார்.
//சடங்குகளின் உள்ளர்த்தங்கள் வெறும் இறை புகழ்ச்சி மட்டுமல்ல. அதில் புரட்சியையும், மாற்றத்தையும் கண்டெடுக்க வேண்டியது அவசியம். அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் சக்தியைத் தராத ஆன்மிகம் வெறும் சடங்கு மட்டுமே. அதனால் மனிதனுக்கு எந்த லாபமும் இல்லை. இதைத்தான் இயேசுவும் சொன்னார், செய்தார்.//
ஆனால் இதனை யாரும் உணருவதே இல்லை. ஏதோ கிறிஸ்தவர்கள் என்றப் பெயருடன் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கின்றார்கள். ஆரம்மக் காலங்களில் இருந்த சமூக உணர்வு இப்பொழுது இல்லை. அன்பு தணிந்து போய் உள்ள காலமாகி விட்டது. தங்களது கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.
// Divya said...
கர்த்தருடைய பிள்ளைகள் கைக்கொள்ள வேண்டியவற்றை பட்டியலிட்டு தெளிவாக எழுதியுள்ளீர்கள்,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாற்றங்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டிய ஒன்று.
//
இவைகளை அனைத்துக் கிறிஸ்தவர்களும் பின்பற்றினால் இறைவன் நம்மில் எவ்வளவு மகிழ்வார். நாமும் நம்முடைய நடக்கையின் மூலமாக மற்ற மக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். அதின் பலன் அவருடைய இரண்டாம் வருகையில் நமக்குக் கிடைக்கும்.தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கருத்துரையிடுக