யாருக்கு உயர்வு

"அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்." ஏசாயா 33:16





கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உயர்வு கிடைத்து விடுமா என்று பார்ப்போமானால் இல்லை என்பதே பதில். நீங்கள் உயர்த்தப்படுவீர்கள், ஆசீர்வதிக்கப்படூவீர்கள் என்று தானே ஊழியர்கள் பிரசங்கிக்கின்றார்கள். அவர்கள் கூறுவது பொய்யா அல்லது உண்மையா? பின்னை யார் உயர்வடைவார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பக்கூடும். உங்களது கேள்விக்குப் பதில் இங்கே. யார் கிறிஸ்துவின் முன்பாக உயர்த்தப்படுவார்கள் என்று பார்ப்போமானால்




1 நீதி செய்பவர்கள்:

"நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்." நீதிமொழிகள் 10: 6

2. செம்மையானவைகளைச் செய்பவர்கள்:


"நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது." சங்கீதம் 97:11

3. பரிதானம்(லஞ்சம்) வாங்காதவர்கள்:


"தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை." சங்கீதம் 15: 5

4.பொல்லாங்கான(தீமையான) காரியங்களைச் செய்யாதவர்கள்:


"பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்." சங்கீதம் 37:9



நாமும் மேலேக் குறிப்பிட்டுள்ளக் காரியங்களைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் கர்த்தர் நம்மையும் இந்தப் பூமியிலே உயர்த்துவார்.




சிந்தனை: நான் உயர்த்தப்படுவதற்குத் தகுதியாய் இருக்கின்றேனா?


ஜெபம்:
கர்த்தாவே நான் இவைகளைக் கைக்கொண்டு இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள உமதுக் கிருபைகளைத் தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்

4 comments:

சொன்னது…

உலகபிரகாரமான ஆசீர்வாதங்கள் மாத்திரமே கர்த்தர் ஆசீர்வாதம் என கருதி, அவற்றிற்காக ஏங்குவதும், ஜெபிப்பதும் ,
ஜெபத்திற்கு பதில் கிடைக்காவிட்டால் மனம் சோர்ந்து, விசுவாசத்தில் குறைந்து போவதும் தவறு.

சொன்னது…

\நாமும் மேலேக் குறிப்பிட்டுள்ளக் காரியங்களைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் கர்த்தர் நம்மையும் இந்தப் பூமியிலே உயர்த்துவார்.\


கர்த்தர் இந்த புவி வாழ்வில் தன்னை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தன்னலமான எண்ணங்களுடன் இல்லாமல்,
நீங்கள் குறிப்பிட்டுள்ள காரியங்களை கைக்கொள்வது கர்த்தரின் பிள்ளைக்கு அழகு என்பது என் கருத்து.

சொன்னது…

// Divya said...
உலகபிரகாரமான ஆசீர்வாதங்கள் மாத்திரமே கர்த்தர் ஆசீர்வாதம் என கருதி, அவற்றிற்காக ஏங்குவதும், ஜெபிப்பதும் ,
ஜெபத்திற்கு பதில் கிடைக்காவிட்டால் மனம் சோர்ந்து, விசுவாசத்தில் குறைந்து போவதும் தவறு.//

ஆம் அநேகர் இம்மைக்காக மாத்திரமே ஜெபிக்கின்றார்கள் மறுமை வாழ்வை நினைப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள் யோபுவின் வாழ்க்கையைத் தங்கள் கண்களுக்கு முன்பாகக் கொண்டு வந்துப் பார்த்தால் அவர்களுக்குக் கிறிஸ்தவத்தின் தன்மை புரியும்.தங்களது கருத்துக்கு நன்றி.

சொன்னது…

// Divya said...
\நாமும் மேலேக் குறிப்பிட்டுள்ளக் காரியங்களைக் கடைப்பிடித்து வாழ்வோமானால் கர்த்தர் நம்மையும் இந்தப் பூமியிலே உயர்த்துவார்.\


கர்த்தர் இந்த புவி வாழ்வில் தன்னை உயர்த்தியே ஆகவேண்டும் என்ற தன்னலமான எண்ணங்களுடன் இல்லாமல்,
நீங்கள் குறிப்பிட்டுள்ள காரியங்களை கைக்கொள்வது கர்த்தரின் பிள்ளைக்கு அழகு என்பது என் கருத்து.
//

வாஸ்தவமான கருத்து.