வேத பகுதி: சங்கீதம் 15:1 - 5
"கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே." சங்கீதம் 15: 1,2
தாவீது ராஜா சங்கீதம் 15 ஆம் அதிகாரம் முதலாம் வசனத்தில் யார் இறைவனின் வீட்டில் தங்குவான்? என்று கேள்வையைக் கேட்டுவிட்டு அதற்கானப் பதில்களை மீதியுள்ள வசனங்களில் குறிப்பிடுகின்றார். நாம் கர்த்தருடையக் கூடாரத்தில் அதாவது பரலோகப் பாக்கியத்திற்கு நம்மிடம் காணப்பட வேண்டியக் குணாதிசயங்கள்
- உத்தமமாய்(நேர்மையாக) நடக்க வேண்டும்
- நீதி செய்ய வேண்டும்
- உண்மையைப் பேச வேண்டும்
- புறங்கூறாதவனாய்(ஒருவர் அவ்விடத்தில் இல்லாதபோது அவரைப் பற்றி இழிவாகக் கூறுதல்) இருக்க வேண்டும்
- அண்டை அயலகத்தாருக்குத் தீங்கு செய்யாதவன்
- தீய மனிதர்களோடு கலவாதவன்
- கர்த்தருக்குப் பயந்தவர்களைக் கனம் பண்ணுகின்றவன்
- வாக்கு தவறாதவன்
- தன் பணத்தை வட்டிக்குக் கொடாதவன்
- குற்றம் புரியாதவனுக்கு எதிராகப் பணம் வாங்காதவன்
ஆம் பிரியமானவர்களே நாமும் மேலே கூறப்பட்டக் குணாதியங்களோடு வாழ்வோமானால் இவ்வுலக ஆசீர்வாதங்களோடு கர்த்தரின் கூடாரமாகியப் பரலோக வாழ்க்கைக்குப் பாக்கியவான்களாய் இருப்போம். மாறாக நாம் இன்னும் துன்மார்க்க வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போமானால் நிரந்தர அக்கினிக் கடலாகிய நரகத்திற்குத் தள்ளப்படுவோம். இர'ண்டில் எது நமக்கு வேண்டும் என்பதை நாமே தீர்மானித்து அதின் படி நடப்போம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
சிந்தனை: நான் கர்த்தரின் கூடாரமாகியப் பரலோக வாழ்க்கைக்குப் பாத்திரமாக இருக்கின்றேனா?
ஜெபம்: அன்பின் தேவனே நான் பரலோகப் பாக்கியத்திற்குத் தகுதியுள்ளவனா(ளா)கப் பரிசுத்தப்படுத்தி, இந்த உலக வாழ்க்கையில் உமக்குச் சாட்சியாக வாழ உன்னத அருள் புரியும். ஆமேன்.
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக