"அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை." சங்கீதம் 34:5
வேதநாயகம் சாஸ்திரியார் ஒரு முறை காட்டு வழியாகப் பல்லக்கில் சென்றுக் கொண்டிருந்தார். நான்கு பேர் பல்லக்கைத் தூக்கிக் கொண்டு வந்தனர். திடீரென ஒரு புலி அவர்களுக்கு எதிராக வந்து கொண்டிருந்தது. இதனைப் பார்த்ததும் பல்லக்கைத் தூக்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒடி விட்டனர். வேதநாயகம் சாஸ்திரியார் மட்டும் பல்லக்கில் இருக்கிறார். புலி பல்லக்கிற்கு மிக அருகில் வந்து விட்டது. ஆனால் வேதநாயகம் சாஸ்திரியாரோ ஓடாமல் கர்த்தரை நோக்கித் துதித்துப் பாடினார். பல்லக்கை நோக்கி வந்த புலி அமைதியாகச் சென்று விட்டது.ஆம் கர்த்தரை நம்பினோர் கைவிடப்படுவதில்லை
பரிசுத்த வேதாகமத்தில் பார்ப்போமானால்
1.ஈசாக்கு கர்த்தரை நோக்கிப் பார்த்த போது பிள்ளையில்லாமல் இருந்த ரெபேக்காள் கர்ப்பம் தரித்தாள்.
2.யாபேஸ் கர்த்தரை நோக்கிப் பார்த்த போது அவர் அவனை அதிகமாக ஆசீர்வதித்தார்.
3.சாலமோன் கர்த்தரை நோக்கிப் பார்த்தபொழுது யாருக்கும் கிடைக்காத ஞானத்தை அவனுக்கு அருளினார்.
4.எசேக்கியா ராஜா வியாதியாயிருக்கும் போது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்தான். அப்பொழுது கர்த்தர் அவனுக்கு இரங்கி 14 வயது கூட்டிக் கொடுத்தார்.
இப்படி கர்த்தரை நோக்கும் போது அவர் செய்த அதிசயங்களைச் சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆம் பிரியமானவர்களே நாமும் கர்த்தரை நோக்கிப் பார்க்கும் போது அவர் நமக்கு விடுதலை அளிக்கிறார். நமது தேவைகளையெல்லாம் சந்திக்கிறார். நாம் முழுமையாக ஆண்டவரிடம் நம்மை அர்ப்பணிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.
சிந்தனை: நான் கர்த்தரை நோக்கிப் பார்க்கிறேனா? இல்லை மனிதர்களை நோக்கிப் பார்க்கிறேனா?
ஜெபம்: கர்த்தாவே நான் உம்மை நோக்கிப் பார்த்து இரட்சிப்பைக் கண்டடையக் கிருபை தாரும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக