மீட்பு

"எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;" ரோமர் 3:23,24



இந்த உலகத்தில் மனிதர்களாகப் பிறந்த யாவருமே பாவிகள் தான். நான் பாவம் செய்யவில்லை என்று ஒரு மனிதனாலும் கூற முடியாது. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் பாவம் செய்ததனால் தேவன் நோவாவை மட்டும் பேழையின் மூலம் காப்பாற்றி மற்ற மனிதர்களை எல்லாம் அழித்தார். பின்னும் ஜனங்கள பாவம் செய்ததனால் தேவன் மோசே மூலமாக ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை ஏற்படுத்தினார். அதின் மூலமாக ஜனங்கள் செய்த பாவங்களுக்கு பாவநிவிர்த்தியாக பலிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.





பலிகளின் மூலமாகப் பாவநிவிர்த்தி செய்து கொள்ளலாம் என்று மக்கள் பின்னும் அதிகமாகப் பாவங்களைச் செய்து இறைவனின் சாயலில் படைக்கப்பட்ட மனிதர்கள் இறைவனின் சாயலை இழந்து விட்டார்கள் ஆகவே தான் இறைவன் தன்னுடைய ஒரேபேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த பாவ உலகத்தின் மக்களின் மீட்புக்காக இந்த உலகத்தின் மீட்பராக அனுப்பினார். இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழியக் காலத்தில் மக்கள் மனந்திரும்பும்படியாக அறைகூவல் விடுத்தார். அதின் தொடர்ச்சியாகத் தான் இந்த பாவ உலகத்தின் மக்களின் மீட்பிற்காகத் தன்னுடைய உயிரைச் சிலுவையில் தியாகம் செய்தார். இயேசு கிறிஸ்துவின் இரத்ததினாலன்றி ஒருவரும் பரலோகம் செல்லமுடியாது. மீட்பரின் கல்வாரிச் சிலுவையின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் மாத்திரமே பரலோகராஜ்ஜியத்தைச் சுதந்தரிக்க முடியும். அவருடைய இரத்தத்தால் கழுவப்படாதவர்கள் நரகத்திற்குத் தான் செல்ல முடியும்.





சிந்தனை: நான் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டிருக்கின்றேனா?


ஜெபம்:
அன்பின் தேவனே நான் என்னுடையப் பாவங்களையெல்லாம் உம்மிடம் அறிக்கையிடுகின்றேன் நீர் என்னை மன்னித்து நான் திரும்பவும் பாவ வாழ்க்கையில் விழாதபடி காத்து பரலோக வாழ்வைக் கண்டடையக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்