உபவாசம்

வேதபகுதி: ஏசாயா 58 : 3 - 14


"விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்@ கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்."ஏசாயா 58: 8 - 11



இன்று முதல் நாம் லெந்து நாட்களை ஆசரிக்க இருக்கிறோம். இந்த நாட்களில் நாம் பண்ணுகின்ற உபவாசங்கள் எப்படிப்பட்டவைகளாக இருக்கின்றது? கடமைக்காகச் செய்கின்றோமா அல்லது உண்மையாக பரிசுத்த உணர்வோடு செய்கின்றோமா என்று நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். இந்த காலங்கள் கொடுக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நம்மைத் தற்பரிசோதனை பண்ணி நம்மைத் திருத்திக் கொள்வதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் நாமோ இந்த நாட்களை ஒரு கடமைக்காகச் ஆசரித்து வருகிறோம்.



ஒரு சிலர் இந்த லெந்து நாட்களில் கண்டிப்பாக ஆலயத்திற்குத் தவறாமல் வந்து விடுவார்கள். ஒரு சிலரோ புகை மது போன்ற பழக்கங்களை இந்தக் கிருபையின் நாட்களில் விட்டு விடுவார்கள். ஆனால் ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடியதும் மீண்டுமாக தங்களுடையப் பாவ வாழ்க்கைக்குத் திரும்பி விடுகின்றார்கள். நமது ஆண்டவர் இப்படிப்பட்டக் காரியங்களை விரும்புவது கிடையாது. நாம் கடமைக்காக இப்படி உபவாச நாட்களை ஆசரிப்பாமானால் இறைவனின் ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்காது. மாறாக நாம் உண்மையுடனும் பரிசுத்தத்துடனும் ஆசரிப்போமானால் மேலே உள்ள வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிர்வாதங்களைத் தேவன் நமக்குத் தந்தருளுவார்.





சிந்தனை: நாம் கடமைக்காக உபவாச நாட்களை ஆசரிக்கின்றோமா? அல்லது உண்மையாக ஆசரிக்கின்றோமா?


ஜெபம்:
ஆண்டவரே நான் இந்தப் பரிசுத்த நாட்களை உண்மையுடனும் பரிசுத்தத்துடனும் ஆசரித்து என் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றம் அடையக் கிருபை தாரும். ஆமேன்.



தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்