நற்கிரியை

"மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது." மத்தேயு 4: 16


வெளிநாட்டில் இருந்து மிஷனெரிகள் நமது நாட்டிற்குச் சுவிஷேசம் அறிவிக்க வந்தார்கள். அவர்கள் ஒவ்வொரு இடங்களிலும் செய்த நற்கிரியைகளைக் கண்டு தான் நமது முன்னோர்கள் இயேசு கிறிஸ்துவைச் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் செய்த நற்கிரியைகள் இன்றும் நமக்குச் சாட்சியாக இருக்கின்றது. ஆனால் இன்று நாமோ பிற மதத்தவர் இகழும் படியானக் காரியங்களைச் செய்து வருகின்றோம். ஆலயங்களிலே ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் சண்டை போட்டுக் கொண்டும், அண்டை வீட்டுக்காரர்களுடன் சமாதானமாக வாழாமல் சண்டை போட்டுக் கொண்டு காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அழைந்துக் கொண்டிருக்கிறார்கள்.


இப்படிப்பட்ட காரியங்களைத் தேவன் விரும்பவில்லை. நாம் நற்காரியங்கள் செய்வதைத் தான் தேவன் விரும்புகிறார். நம்மிடத்தில் நற்காரியங்கள் காணப்படவில்லை என்றால் நாம் இன்னும் இருளில் தான் இருக்கிறோம். நாம் நற்கிரியைகள் செய்யும் போது கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படுகின்றது. நம்மால் கிறிஸ்துவின் நாமம் மகிமைப்படும் போது நாம் தேவனுடைய சந்நிதியில் நினைக்கப்படுவோம். ஒளியாகிய கிறிஸ்து நம்மிடத்தில் காணப்படுவாராகில் கப்பல்கள் இருளான நேரத்தில் கலங்கரை விளக்கத்திலுள்ள விளக்கைப் பார்த்துச் சரியானப் பாதையில் வருவது போல மற்ற மக்களும் நம்முடைய நற்கிரியைகளைப் பார்த்து கிறிஸ்துவினிடத்தில் வருவார்கள்.




சிந்தனை: நம்முடையக் கிரியைகள் எப்படிப்பட்டவைகளாயிருக்கிறது? நற்கிரியைகளா அல்லது துர்க்கிரியைகளா?

ஜெபம்:
கிருபை நிறைந்த இயேசுவே என்னுடையக் கிரியைகள் மற்றவர்களை உம்மண்டைச் சேர்க்கின்றக் கருவியாகச் செயல்படக் கிருபை புரியும். ஆமேன்.


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்