வேதபகுதி: யோவான் 15 : 1 - 17
"நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்." யோவான் 15 : 16
இந்தப் பகுதியில் இயேசு கிறிஸ்து நம்மைப் பார்த்து உங்களை நான் தெரிந்துக் கொண்டேன் என்று கூறுகிறார். அவர் நம்மைத் தம்முடைய சொந்த ஜனமல்லாவர்களாயிருந்தாலும் நம்மைத் தெரிந்து கொண்டு நம்மை ஆசீர்வதிப்பதற்காக நம்மைப் பெயர் சொல்லி அழைக்கிறார்.நாம் திராட்சைசெடியாகிய இயேசுவில் கொடியாக நிலைத்திருக்கும்படியாக நம்மை அழைக்கிறார். நாம் திராட்சைச் செடியாகிய இயேசு கிறிஸ்துவில் கொடியாக நிலைத்திருந்து கனிகொடுக்கும்படியாக நம்மை அழைக்கிறார். நாம் அப்படிக் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் போது அவர் நம்மை இந்த உலகப்பிரகாரமாக உள்ள ஆசீர்வாதங்களினாலும் உன்னதங்களிலுள்ள ஆசீர்வாதங்களினாலும் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.
நம்மை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்து அவருடைய அவருடைய அடிச்சுவடிகளைப் பின்பற்றி நடப்போமானால் நம்மை இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிப்பார். கிறிஸ்து நம்முடைய வாழ்க்கையின் தலைவராக இருப்பாரானால் நம்மை இந்த உலகத்தில் எதிர்த்து நிற்ப்பவன் யார்?
சிந்தனை: நான் திராட்சைச் செடியாகியக் கிறிஸ்துவில் நிலைத்திறுக்கிறேனா?
ஜெபம்: தேவனே நான் உம்மில் நிலைத்திருந்து நற்கனிகளைக் கொடுக்கக் கிருபை தாரும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக