மதியம் திங்கள், 3 மார்ச், 2008

மறவாத ஆண்டவர்

வேதபகுதி: ஏசாயா 44: 21 - 22

"நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை." ஏசாயா 44: 21


இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் தங்களுக்குச் செய்த அதிசயங்களை எல்லாம் மறந்து விட்டுத் தங்கள் தேவனாகியக் கர்த்தரை மறந்துப் போனார்கள். ஆகையினால் அவர்களை அருகில் இருந்த ராஜாக்களுக்கு அடிமைகளாக விற்றுப்போட்டார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைத் தங்களுடைய பாவங்களை விட்டுத் திரும்பும்படி அவர்களைப் பல்வேறு தீர்க்கதரிசிகளின் மூலமாக எச்சரிக்கிறார்.அவர்கள் தங்களுடையப் பாவங்களை விட்டு மனந்திரும்பினபோதோ அவர்களைச் சுற்றியிருந்த எல்லாக் கட்டுகளில் இருந்தும் விடுவித்தார்.


நம்முடையத் தேவனாகியக் கர்த்தர் நம்மைத் தன்னுடைய உள்ளங்கைகளில் வரைந்துப் பாதுகாத்து வருகிறார். ஆனால் நாமோ பல வேலைகளில் கர்த்தரை மறந்து விட்டு உலகப்பிரகாரமானக் காரியங்களில் சிக்குண்டுத் தவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் கர்த்தரிடம் திரும்புவோமானால் அவர் நம்முடைய மீறுதல்களை மேகத்தைப் போலவும் நம்முடையப் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன் என்னிடத்தில் மனந்திரும்பு என்று கர்த்தர் உரைக்கிறார். ஆனால் இன்னும் நம்முடையப் பாவ வாழ்க்கையிலேயே வாழ்ந்துக் கொண்டிருப்போமானால் நம்மை மறவாத ஆண்டவரிடம் இன்றே அர்ப்பணிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.




சிந்தனை: என்னை மறவா யேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்

ஜெபம்:
என்னை மறவாத அன்பின் நேசரே நான் என்னையே உம்மிடம் தருகிறேன் நீரே ஏற்று வழிநடத்தும் .ஆமேன்


தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்