"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்." ரோமர் 8 :28
ஆம் பிரியமானவர்களே நமக்குத் துன்பங்கள் துயரங்கள் வருகின்ற நேரங்களிலெல்லாம் நாம் தேவனை உறுதியாய்ப் பற்றிக் கொண்டு அவருடைய சித்தத்தின்படி நடக்கும் போது அவர் நமக்கு நேரிட்டுள்ள துன்பங்கள் கஷ்டங்கள் எல்லாவற்றையும் மாற்றி நம்மை மற்ற மனிதர்களுக்கு முன்பாக நம்மை உயர்த்துவார். யோபுவின் வாழ்க்கையிலும் இது தான் நடந்தது, யோபு தன்னுடைய துன்ப நேரத்திலும் தேவனை மறுதலிக்கவோ தூஷிக்கவொ இல்லை. எனவே தேவன் அவருடையத் துன்பங்கள் எல்லாவற்றையும் மாற்றி அவருடைய வாழ்க்கையிலே இரட்டிப்பான ஆசீர்வாதத்தைத் தந்தருளினார். நாம் நம்முடையத் துன்ப வேளைகளிலே எப்படி நடக்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை: நாம் நமது துன்ப வேளைகளில் தேவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கின்றோமா? அல்லது தேவனைத் தானே நான் நம்பியிருக்கின்றேன் எனக்கு ஏன் துன்பம் வருகின்றது என்று முறுமுறுக்கின்றோமா?
ஜெபம்: அன்பின் தேவனே நான் என்னுடையக் கஷ்ட வேளைகளிலும் துன்ப வேளைகளிலும் உம்மை விடாமல் பற்றிக் கொள்ளக் கிருபைகளைத் தாரும். ஆமேன்
தமிழ் வேதாகமம் படிக்க இங்கே சொடுக்கவும்
0 comments:
கருத்துரையிடுக